வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சிறுபான்மை இன மக்களின் காவலர்கள் ஆட்சியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்க்கு நியாயம் இல்லை என்பது ஆச்சர்யமாக இல்லையா.
இந்த போலீசார் மேலிடத்துச் செல்வாக்கு இல்லாதவர்கள் ..... அது இருந்தால் கேள்விகேட்பார் இல்லை .....
சென்னை,:அனுமதியின்றி பணிக்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆன, இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு, மீண்டும் பணி வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மண்டபம் முகாமில், பழனிசாமி என்பவர், 2003 டிசம்பரில் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார். 2007 மார்ச்சில், மூன்று நாள் சாதாரண விடுப்பில் சென்றார்; பின், இரண்டு முறை விடுப்பை நீட்டித்தார். அனுமதி பெறவில்லை
அதைத்தொடர்ந்து, பணியில் சேராமல், 21 நாட்களுக்கு மேலாக, 'ஆப்சென்ட்' ஆனார். எந்த அனுமதியும் பெறவில்லை. இதையடுத்து, 'மெமோ' வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்காததால், பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்கு பின், டி.ஜி.பி.,யிடம் இவர் அளித்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பணி நீக்கத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி அமர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதேபோல, சென்னையை அடுத்த ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியனில் ஆரோக்கியசாமி என்பவர், 1997ல் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்தார். நீண்ட நாட்கள் பணிக்கு வராமல் ஆப்சென்ட் ஆனதால், விசாரணைக்கு பின், பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பணி நீக்கம் அதிகபட்ச தண்டனை எனக்கூறி, அதை ரத்து செய்து, மீண்டும் பணியில் அமர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த இரண்டு உத்தரவு களையும் எதிர்த்து, உள்துறை மற்றும் டி.ஜி.பி., தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன், அரசு வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகினர். முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
சீருடை பணியில் இருக்கும் போலீசாருக்கு, கடமையில் அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் இருக்க வேண்டும். எந்த காரணமும் இன்றி, அனுமதியும் பெறாமல், 21 நாட்கள் பழனிசாமி ஆப்சென்ட் ஆகியுள்ளார். உரிய விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், அவரை மீண்டும் பணியில் அமர்த்தும்படி பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட வேண்டிய துள்ளது. பணி நீக்க உத்தரவுக்குப் பதில், கட்டாய ஓய்வு என, மாற்றி உத்தரவிடுகிறோம். சம்பள குறைப்பு
கான்ஸ்டபிள் ஆரோக்கியசாமியை பொறுத்தவரை, ஏற்கனவே நான்கு முறை ஆப்சென்ட் ஆகியுள்ளார். அதற்காக, சம்பள குறைப்பு, ஊக்க ஊதியம் தள்ளிவைப்பு என, தண்டனை பெற்றுள்ளார். சீருடை பணியில் இருப்பவர்கள் ஆப்சென்ட் ஆவது, கடுமையான ஒழுங்கீனம் என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளை நிரூபித்தால் தான், அதிகாரிகள் சலுகை அளிக்க முடியும்.எனவே, ஆரோக்கியசாமியின் பணி நீக்கத்தை உறுதி செய்கிறோம். விதிகளின்படி, 12 வாரங்களுக்குள் பணப்பலன்களை இருவருக்கும் வழங்க, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
சிறுபான்மை இன மக்களின் காவலர்கள் ஆட்சியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்க்கு நியாயம் இல்லை என்பது ஆச்சர்யமாக இல்லையா.
இந்த போலீசார் மேலிடத்துச் செல்வாக்கு இல்லாதவர்கள் ..... அது இருந்தால் கேள்விகேட்பார் இல்லை .....