குற்றாலம்:வனத்துறை முயற்சிக்கு எதிர்ப்பு
தென்காசி:பழைய குற்றால அருவியை வனத்துறையினர் அபகரிக்கும் முயற்சிக்கு எதிராக தென்காசியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதி வேண்டும். விவசாயிகள் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.