மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
சென்னை:தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் ஏப்., 6ம் தேதி 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, பா.ஜ., நிர்வாகி கோவர்த்தனன், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் ஆகியோரின் வீடுகளில், தாம்பரம் போலீசார் சோதனை நடத்தினர். சமீபத்தில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.இதையடுத்து, நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன், அவரது ஊழியர்கள் ஆசைத்தம்பி, ஜெயக்குமார் ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர். இதில், ஜெயக்குமார் ஆஜராகவில்லை. மற்ற இருவரிடம் நேற்று முன்தினம் காலை 11:00 முதல் இரவு 8.30 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர்.இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாம்பரத்தில் கைதானவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். தாம்பரம் போலீசாரிடம் கைதானவர்கள் கூறிய வாக்குமூலங்களின் அடிப்படையில் முருகன், ஆசைத்தம்பி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.துவக்கத்தில் இருந்து பணம் வந்த பின்னணி குறித்து இருவருமே பதில் அளிக்கவில்லை. தங்களுக்கும் பணம் பிடிபட்ட சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே பதிலாக தந்தனர். விசாரணையின் போது முருகன் கூறுகையில், 'நான் நயினாரின் உறவினர். அந்தப் பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நயினாரின் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு, 'சென்னையில் இருந்து நெல்லைக்கு பொருள்களை கொண்டு செல்ல இரு உதவியாளர்கள் வேண்டும்' என்று கேட்டார். நானும் ஆட்களை அனுப்பி வைத்தேன். மற்றபடி, எனக்கு வேறு எந்த தகவலும் தெரியாது' என்று கூறியுள்ளார். ஆனால், கைதானவர்களிடம் தாம்பரம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தையும், முருகனின் வாக்குமூலத்தையும் ஒப்பிடும் போது சில தகவல்கள் முரண்படுவது தெரிகிறது. அடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
10 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago