உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

சென்னை:அரசு மரியாதையுடன், மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆர்., கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், 98, நேற்று முன்தினம் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் திருமலைப் பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சார்பில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயகுமார்; மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், நடிகர் ரஜினி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும், பொதுமக்களும் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ