வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசு கள் விற்பனை செய்ய வேண்டும்.அப்பொழுது விச கள் தடுக்கப்படும்.
பல்லடம்: ''கள் மதுபானம் என்பதை நிரூபிக்க முடியுமா என, தமிழக 39 எம்.பி.,க் களுக்கும் சவால் விடுகிறேன்,'' என, தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி பேசியதாவது:
சமீப காலமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. பீஹாரில், பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு, கள்ளுக்கு தடை நீக்கப்பட்ட பின், குற்றங்கள் குறைந்துள்ளன. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க இம்மாநில அரசு மறுத்துவிட்டது.ஆனால், தமிழகத்திலோ 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 38 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ளது. கள் மது பானம் என்பதை, தமிழகத்தின் 39 எம்.பி.,க்களும் நிரூபித்துக் காட்ட முடியுமா என்று சவால் விடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். விவசாய சங்க நிர்வாகிகள் அனைவரும், விழா மேடையிலேயே கள் அருந்தினர். மதுவிலக்கு சட்டத்தில் இருந்து கள்ளை நீக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். தமிழகம் முழுதும் இது போன்ற கள் விடுதலை மாநாடு நடத்தப்படும் என் பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு கள் விற்பனை செய்ய வேண்டும்.அப்பொழுது விச கள் தடுக்கப்படும்.