உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52% அதிகரிப்பு; புள்ளி விபரத்தோடு ராமதாஸ் புகார்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52% அதிகரிப்பு; புள்ளி விபரத்தோடு ராமதாஸ் புகார்!

சென்னை: 'தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் கடந்த ஆண்டில் 52% அதிகரித்துள்ளது. அவர்கள் வாழத் தகுதியற்ற நாடாக தமிழகத்தை மாற்றி விடக் கூடாது' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி 2024ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023ம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 2394 , அதாவது 52.30% அதிகம் ஆகும். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகையக் குற்றங்களைத் தடுக்க அரசும், போலீசாரும் தவறியது கண்டிக்கத்தக்கது.போக்சோ சட்டம் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது; அதனால் தான் இந்த அளவுக்கு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என்று கூறி, இந்த வேதனையையும் தங்களின் சாதனையாக மாற்றிக் கொள்ள அரசும், போலீசாரும் முயலக்கூடாது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என்று பா.ம.க., பல ஆண்டுகளாகக் கூறி வருகிறது. அது உண்மை என்பதைத் தான் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது காட்டுகிறது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது மட்டுமே போதுமானதல்ல. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதன் மூலம், தமிழகம் பெண்களும், குழந்தைகளும் வாழத் தகுதியற்ற நாடு என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது. தமிழகத்தில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிட்டுக்குருவி
மார் 03, 2025 07:18

சாராயம் விற்பதற்கு மட்டும் பலவகையிலும் கூட்டம்போட்டு சிந்தனை செய்கிறீர்கள். மக்களை பாதுகாக்க சிந்திக்காது ஏன்?


சிட்டுக்குருவி
மார் 03, 2025 07:15

சுதந்திர நாட்டில் மக்களின் பாதுகாப்பே ஒரு அரசின் தலையாய கடமை. அந்த கடமையை நிறைவேற்ற முடியாத ஒரு அரசு மக்களுக்கு தேவையா? மக்கள் சிந்திக்கவேண்டும்.


krishnan
மார் 02, 2025 21:07

eve teasing , rape , kalla sarayam கஞ்சா ஒழிக்க ஒரு 20 encounter தேவை . தி மு க எப்பவும் இடுப்பு கில்லிகளை ..ரொடிகளை பிரமிடின் அடிப்பாகத்தில் வைத்திருக்கிறது ..சும்மாவா தீய சக்தின்னு சொன்னாங்க. admk ஒரு விஷயத்தில் மாறுபடுகிறது .. பெண்கள் பாலியலில் மற்றும் தேச விரோதத்தில் . பொள்ளாச்சி தவிர.


மோகனசுந்தரம் லண்டன்
மார் 02, 2025 20:49

பெட்டி கிடைத்தால் நான் எந்த சாக்கடையிலும் போய் விழுவேன்


Padmasridharan
மார் 02, 2025 18:33

ஆண்களுக்கு காவலர்கள் செய்யும் தொல்லைகள் வெளியில் வராமல் இருக்கின்றது அதனால்தான் பெண்களுக்கு மட்டும். புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன


Petchi Muthu
மார் 02, 2025 15:08

இது ஊர் அறிந்த நாடறிந்த விஷயம்தான்


naranam
மார் 02, 2025 14:55

ஆனால் இந்த திருட்டு திராவிட கட்சியுனேயே கூட்டணி வைக்கத் துடிக்கிறயே?


புதிய வீடியோ