உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வறண்டு வரும் நீர்நிலைகள் வெளியேறும் முதலைகள்

வறண்டு வரும் நீர்நிலைகள் வெளியேறும் முதலைகள்

சென்னை:நீர்வளத்துறையின் பராமரிப்பில் 90 அணைகள், 15,000த்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. தற்போது, கோடை வெப்பம் காரணமாக பெரும்பாலான அணைகள் வறண்டு கிடக்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகளில் முதலைகள் அதிகளவில் உள்ளன; பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் உள்ளன. அணைகள், ஏரிகள் வறண்டு வரும் நிலையில், முதலைகள், விஷப் பூச்சிகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள், வயல்கள் உள்ளிட்டவற்றை நோக்கி வருகின்றன. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் பீதியில் உறைந்துள்ளனர். எனவே, கோடைக்காலம் முடியும் வரை, நீர்நிலைகளில் இருந்து முதலைகள், விஷப் பூச்சிகள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை, நீர்வளத் துறை மற்றும் வனத் துறை மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்