உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு

கடலுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியது.நெய்வேலி அடுத்த அரங்கமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் மகன் ரவிசங்கர், 33; இவர், 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடந்த 2021ம் ஆண்டு, பாலியல் பலாத்காரம் செய்தார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ரவிசங்கரை கைது செய்த நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது கடலுார் போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதிரத்தினம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவிசங்கருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.7 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Keshavan.J
ஆக 31, 2024 10:39

Ravishankar raped her and got sentenced for 20 years. Why Tamil nadu government has to give 700,000 rupees. this is not fair.


Rajah
ஆக 31, 2024 09:43

படத்தில் இருப்பவரை பார்த்தால் வாலிபரகாத் தெரியவில்லையே? உண்மைக் குற்றவாளி அரசியல்வாதியின் உறவினராக இருக்குமோ?


Barakat Ali
ஆக 31, 2024 08:21

பதிமூன்று வயது சிறுமியிடம் ஆசைவார்த்தையா ???? அப்படி என்னங்க சொல்ட்டாரு ????


Barakat Ali
ஆக 31, 2024 08:21

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.7 லட்சம் வழங்க உத்தரவிட்டார் ........... அப்பாடா .... கள்ளக்குறிச்சி டொனேஷனை விட கம்மி ........


சமீபத்திய செய்தி