உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சைபர் மோசடி பேர்வழி கைது

சைபர் மோசடி பேர்வழி கைது

கோவை : 'பெட்எக்ஸ்' மோசடியில் தொடர்புடைய வடமாநில நபரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை, செலக்கரிசலை சேர்ந்தவர் ரித்திகா, 25. கடந்த செப்டம்பரில் இவர் அலைபேசியில் தொடர்பு கொண்டவர், பெட்எக்ஸ் கூரியர் நிறுவன ஊழியர் எனவும்,ரித்திகாவின் ஆதார் எண் வாயிலாகபோதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.சிறிது நேரத்தில், 'ஸ்கைப்' வாயிலாக வீடியோ காலில் பேசியவர், மும்பை சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறி, போதைப்பொருள் அனுப்பியது தொடர்பாக, வங்கிக்கணக்கு விபரங்களை ஆய்வு செய்ய, அதில் உள்ள பணம் முழுதையும் உடனடியாக அவர்களுக்கு அனுப்ப அறிவுறுத்தினார்.இல்லை எனில் வழக்கு பதிந்து கைது செய்யப்படுவீர் என்றார்.வங்கிக்கணக்கில் இருந்த, 10 லட்சம் ரூபாயை ரித்திகா அவர்களுக்கு அனுப்பினார்.நீண்ட நாட்களாகியும் பணம் திரும்பவில்லை. அவர்கள் அழைத்த எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரித்திகா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.தனிப்படை போலீஸ் விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது டில்லியை சேர்ந்த கோபிகுமார், 42, என, தெரிந்தது. டில்லியில் அவரை கைது செய்த தனிப்படையினர், கோவை அழைத்து வந்தனர். தொடர் விசாரணையில், போலீஸ் ஸ்டேஷன் 'செட் அப்'பில் வீடியோ காலில் பேசி மிரட்டி, 11 பேரிடம், 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரிந்தது.மோசடி பணத்தில், அவர் டில்லியில் இரு நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார்.அவரிடம் ஆறு மொபைல்போன், ஏழு ஏ.டி.எம்., கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை