உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா என்னா வெயிலு! தாங்க முடியல!: 7 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்

அப்பா என்னா வெயிலு! தாங்க முடியல!: 7 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sjxxx8zm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஆரஞ்சு அலர்ட்

கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்

ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 8 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
மே 02, 2024 20:46

பெங்களூரின் ஒரு சில பகுதிகளில் இப்பொழுது இடி, மின்னலுடன் மழை ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கியது இதுபோன்று தினமும் ஒரு மணிநேரம் பெய்தால் ஆஹா எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்


துரை
மே 02, 2024 19:12

எங்க ஊர் திருநாளுக்கு சுத்துவட்டாரத்திலிருந்து கார், ஆட்டொ, டூ வீலர் மூலம் வழக்ஜற்றை விட மூணு நாலு மடங்கா ஜனங்க வருகை. ஊர் முழுக்க வாகனங்களை நிறுத்தி சாமி கும்புடறாங்களாம். உள்ளூர்க்.காரன் நிக்க வழியில்லை. வீட்டுலேயே இருந்து டி.வி ல காட்டற உற்சவத்தப் பாருங்கன்னா ஒருபய கேக்க மாட்டேங்குறான். ஒவ்வொரு விட்டு முன்னாடியும்.கண்டவன் காரை நிறுத்தி ஏ.சி போட்டுக்கிட்டு உள்ளே உக்காந்து க்கறான். எல்லாரும் படிச்ச தத்திகள். ஐ.டி ல வேலை பாக்குற தத்திகள். ஒரு மரம் வைடான்னா கேக்க மாட்டான். இருக்கிற மரத்தை வெட்டி கார் பார்க்கிங் பண்ணிக்கறான்.


அப்புசாமி
மே 02, 2024 19:06

கோவிட் காலம்.மாதிரி.ஒரு பத்து நாள்.லாக்டவுன் போடுங்க. பூமி குளிரும்.


Rengaraj
மே 02, 2024 13:54

நாட்டில் ஏர் கண்டிஷன் மெஷின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது தவணை முறையில் ஏர் கண்டிஷன் மெஷின் விற்பனை அதிகமாக விற்பனையாகிறது நாட்டில் புதிதாக திறக்கப்படும் சிறு சிறு வியாபார கடைகள் ஹோட்டல், காபி ஷாப், மெடிக்கல் ஷாப், துணிக்கடைகள், சிறு டிபார்ட்மென்ட் ஸ்டோர், மொபைல் விற்பனை கடைகள், ஏன் வாகன ரிப்பேர் கடைகள் உட்பட ஏர் கண்டிஷன் மெஷின் வசதிகளுடன் உள்ளன அவற்றின் மூலம் வெளியிடப்படும் வெப்பமும் நாட்டில் வெப்பநிலை அதிகரிப்புக்கு ஒரு காரணம் இதை யாரும் மறுக்கமுடியாது


Mohan
மே 02, 2024 13:00

அட என்னப்பா இப்பவே அழுத்துகுறீங்க இன்னும் நிறைய இருக்கு நாம கொஞ்ச நஞ்சமா நாசம் பண்ணி வெச்சிருக்கோம் நம்ம தமிழனுக்கு மரத்த கண்டாலே பிடிக்காது , ஊரு பூரா காங்கிறீட் காடுகள் நல்ல வசதியா ஊற அடிச்சு ஓலைல போட்டுட்டு இருக்கணும் ,எல்லா ரோடும் அகலப்படுத்தனும் நம்ம நாட்டு மக்கள் தொகைக்கு நாடு பூரா இருக்குற ரோடு எல்லாம் எட்டு வழி சாலை போட்டாலும் பத்தாது நமக்குத்தான் ஒரு ஒழுக்கம் வேணும் இல்லேன்னா இப்படித்தான் நல்ல மொட்டை வெயில் ல அந்த ரோடு ல படுத்து உருளுங்க ஹா ஹ ஹ


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை