உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் அம்மன்-30 : வழக்குகள் தீர...

தினமும் அம்மன்-30 : வழக்குகள் தீர...

நீண்ட காலமாக இழுக்கும் வழக்குகளை தீர்க்கிறாள் சேலம் எட்டுப்பேட்டை பெரிய மாரியம்மன். சுற்றியுள்ள எட்டு மாரியம்மன் கோயில்களுக்கு இக்கோயிலே முதன்மை என்பதால், இந்த அம்மனை 'கோட்டை பெரிய மாரியம்மன்' என்றும் அழைக்கின்றனர். முன்பு சேர நாட்டை சேர்ந்த சிற்றரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். கோட்டைக்கு காவல் தெய்வமாக இந்த மாரியம்மனே இருந்திருக்கிறாள். காலப்போக்கில் கோட்டை சிதிலமடையவே திருமணிமுத்தாற்றின் அருகில் தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டினர். மாரியம்மன் அன்பும், கருணையும் ததும்பும் வடிவமாய் புன்முறுவல் முகத்தினை உடையவளாய் காட்சி அளிக்கிறாள். அவளின் கிரீடம் அக்னி ஜூவாலையால் ஒளி வீசுகிறது. நான்கு கரங்களில் நாக உடுக்கையும், பாசமும், திரிசூலமும், கபாலமும் ஏந்தியிருக்கிறாள். ராகு காலத்தில் இவளை வழிபட்டால் வழக்குகள் சாதகமாகும். அம்மை நோய் குணமடைந்தவர்கள் அம்மனுக்கு பிடித்த உணவான தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், கூழ், நீர்மோரை நைவேத்யம் செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாவிளக்கு எடுக்கின்றனர்.எப்படி செல்வதுசேலம் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக 3 கி.மீ.,நேரம் : அதிகாலை 5:00 - 2:00 மணி மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு0427 - 226 7845


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை