உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார் பந்தய பாதுகாப்பில் இருந்த கொளத்துார் உதவி கமிஷனர் இறப்பு

கார் பந்தய பாதுகாப்பில் இருந்த கொளத்துார் உதவி கமிஷனர் இறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அம்பத்துார், ஒரகடத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 53; கொளத்துார் சரக காவல் நிலைய உதவி கமிஷனர். சென்னையில் நேற்று நடந்த பார்முலா - 4 கார் பந்தயத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.பணியில் ஈடுபட்டிருந்த அவர், மதியம் 12:45 மணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு விழுந்தார். உடனடியாக, '108' ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தும், கார் பந்தயத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததால், ஆம்புலன்ஸ் வருவதற்கு, ஒரு மணி நேரம் தாமதம் ஆனது. இதையடுத்து, அவ்வாகனத்தின் வாயிலாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிவகுமார் சேர்க்கப்பட்டார்.மதியம் வரை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், மாலை 4:00 மணிக்கு மேல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறினர். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னையில் பாதுகாப்பு பணியின்போது இறந்த, காவல் துறை உதவி கமிஷனர் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

theruvasagan
செப் 01, 2024 09:29

நீட்டால யாராவது செத்தா எழவு கொண்டாடி நீட்டை ஒழிக்கணும்னு கொடி புடிக்கறவனுக இப்ப கார் பந்தயம் தடை பண்ணனும்னு கேப்பாங்களாக.


Nandakumar Naidu.
செப் 01, 2024 08:52

கார் பந்தயம் முதல் உயிரை பறித்து விட்டது. ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரம் ஆகியது என்றால், மிகவும் மோசமான ஏற்பாடுகள் என்று அர்த்தம்.


dhandapani R
செப் 01, 2024 08:06

ஓவ்வொரு வீட்டிலும் ஒருத்தர் செத்தால் கூட பிச்சை வாங்கும் மக்கள் இருக்கும் வரை இவர்கள் ஆட்சி தான்


raja
செப் 01, 2024 07:31

ரெட்டியும் ஒன்கொள் கோவால் புற கொல்லையற்களும் கொள்ளையடிக்க தமிழன் வரிபணம் சுரண்ட படுவது மட்டும் அல்லாமல் உயிரையும் கொடுக்க வேண்டி இருக்கு... அடுத்தவெளை உணவுக்கு கஷ்டப்படும் மக்கள் இருக்க வந்தே பரத் வண்டி தேவையான்னு கேட்ட ருவா 200 உபீ ஸ் குடும்ப பரம்பரை கொத்தடிமை எல்லாம் வாங்கப்பப்பா...


N Annamalai
செப் 01, 2024 07:30

இது ஒரு தேவை இல்லா விளையாட்டு .தனி மனித செயலுக்கு இவர் பலி ஆகி உள்ளார் .கண்டனங்கள் .இரங்கல்கள் .குடும்ப தலைவரை இழந்த குடும்பத்துக்கு அனுதாபங்கள் .


raja
செப் 01, 2024 07:26

நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு எட்டு ஆடு கேட்குமாம்... கோமாலிகளிடம் ருவா 2000 ரத்துக்கு ஆட்சி கொடுத்தாச்சு அனுபவி மக்கா...


PVR
செப் 01, 2024 06:53

The statue of justice has already been blind folded


Kasimani Baskaran
செப் 01, 2024 06:07

என்ன ஒரு சோகம்... ஒருவேளை பார்க்ககூடாதது எதையாவது பார்த்துத்தொலைத்து இருப்பாரோ


ManiK
செப் 01, 2024 03:45

உதயநிதி இநத துயரமான இழப்புக்கு பதில் சொல்லயே ஆகவேண்டும். High Court should charge those in power for not following its order which said no public should be affected.


K.SANTHANAM
செப் 01, 2024 02:52

மக்களுக்கு தேவையில்லாத கார் பந்தயத்திற்காக ஒரு காவல் துறை அதிகாரி மரணம் வருத்தத்தை அளிக்கிறது. உயர்நீதிமன்றம் போன உயிரை உயிர்ப்பிக்குமா..


சமீபத்திய செய்தி