உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவி, மகளுக்கு கொலை மிரட்டல்: ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு பாதுகாப்பு

மனைவி, மகளுக்கு கொலை மிரட்டல்: ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகள், மனைவியை கடத்தி கொன்று விடுவோம் என, மிரட்டல் கடிதம் வந்துள்ளதால், ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், 52. சென்னை பெரம்பூரில் ஜூலை, 5ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ரவுடிகள், வழக்கறிஞர்கள் உள்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் சில ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கூட்டாளிகள், 17 பேர் ரகசிய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட பெரம்பூர் வேணுகோபால சாமி தெருவில் தான், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகம் உள்ளது. இதன் முகவரிக்கு, செங்கல்பட்டு மாவட்டம், படூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்,39 என்பவர் எழுதியது போல, கடிதம் ஒன்று வந்துள்ளது. இதை ஆம்ஸ்ட்ராங் உதவியாளர் செல்வம் வாங்கி படித்துள்ளார்.கடிதத்தில், 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்துள்ள என் நண்பனை உடனடியாக விடுவிக்க வேண்டும். மறுத்தால் ஆம்ஸ்ட்ராங் மகள், மனைவியை கடத்தி கொன்று விடுவோம். அடுத்தடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தில் உள்ள நபர்களை வெடிகுண்டுகள் வீசி கொல்வோம்' என, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கொலை மிரட்டல் கடிதத்துடன், செம்பியம் போலீசில், செல்வம் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கொலை மிரட்டல் கடிதத்தில் இருந்த முகவரிக்கு சென்று சதீஷிடம் போலீசார் விசாரித்தனர். அவரோ, கடிதத்திற்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தன் பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். போலீசார் அவரை தற்போது விடுவித்து, அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி உள்ளனர். கொலை மிரட்டல் காரணமாக, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வசித்து வரும், சென்னை அயனாவரத்தில் உள்ள குடியிருப்புக்கு, சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஆக 05, 2024 13:59

மும்பையில் வசிக்கும் சூரியாவின் சென்னை வீட்டுக்கு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய காவல். ஆம்ஸ்ட்ராங் இறந்த பின் வீட்டுக்கு காவல். விடியல்?


RAMAKRISHNAN NATESAN
ஆக 05, 2024 08:17

கொலை மிரட்டல் காரணமாக, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வசித்து வரும், சென்னை அயனாவரத்தில் உள்ள குடியிருப்புக்கு, சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ........... இது முன்னேறிய மாநிலமாம் ..... தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா பாரதியார் .....


Naga Subramanian
ஆக 05, 2024 06:22

ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் கொலை போன்றுதான் தென்படுகிறது. இப்பொழுது கொலை மிரட்டல் அன்னாரது மனைவி மக்கள் வரை சென்றுள்ளது. கண்டிக்கத்தக்கதே பல படித்த வழக்கறிஞர்கள் கூட ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் வேதனையான செய்தி. இப்படி படுகொலை செய்ய பின்னணி காரணம் என்ன என்பதுதான் இன்றளவும் புரியவில்லை.


skanda kumar
ஆக 05, 2024 09:54

உண்மை கடைசி வரை வெளி வராது. எவ்வளவு அரசியல் லாபம் முடியுமோ அவ்வளவும் நடக்கும். மற்ற கொலைகள் போல இதையும் எல்லோரும் மறந்து விடுவார்கள்


nagendhiran
ஆக 05, 2024 06:14

விடியல்"கெத்து அனுபவித்துதான் ஆகனும் தலையெழுத்து?


Kasimani Baskaran
ஆக 05, 2024 05:31

தனக்கு போட்டியாக ஒரு கட்சியும் வந்துவிடக்கூடாது என்பதில் முக மிக கவனமாக இருந்தார். யார் யாரெல்லாம் எதிரியாக வந்தார்களோ அவர்களுக்கெல்லாம் பெட்டி கொடுத்து ஓட்டை பிரிக்கும் ஒரு கட்சியாகவே மாற்றி விட்டார். கம்யூனிஸ்ட்கள், சைமன் மற்றும் வைக்கோவை அதில் சேர்க்கலாம். இரஜினியை வேறு விதமாக படமெடுத்து ஒதுக்கி வைத்தார்கள். வெளிமாநிலத்தில் இருந்து ஒரு கட்சி தமிழகத்துக்கு வந்து வேரூன்ற முயன்றதும் கொலை செய்யப்பட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.


Tirunelveliகாரன்
ஆக 05, 2024 11:37

மிகப்பெரிய காமெடி


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி