உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நண்பர் யார், பகைவர் யார் என முடிவு செய்யுங்கள்l

நண்பர் யார், பகைவர் யார் என முடிவு செய்யுங்கள்l

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை முடிவு செய்து, அரசியலில் பயணிக்க வேண்டும் என, பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுறுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்., தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கேரள மாநிலம், பாலக்காட்டில், சமீபத்தில் மூன்று நாட்கள் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, பா.ஜ., தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் மற்றும் 32 சங்பரிவார் அமைப்புகளின் தேசிய தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், 300 பேர் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6i6uxnx5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்தில், சங் பரிவார் அமைப்புக்கள், தங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தன. இயற்கை பேரிடர்கள், ரயில் விபத்து போன்ற பெரும் விபத்துக்கள், குறிப்பாக வயநாடு நிலச்சரிவின்போது, ஆர்.எஸ்.எஸ்., மேற்கொண்ட மீட்பு, நிவாரண பணிகள் குறித்து, கூட்டத்தில் விவரிக்கப்பட்டது. இதுபோன்ற பேரிடர்களின்போது, வருங்காலத்தில் எப்படி ஒருங்கிணைத்து செயல்படுவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடந்துள்ளது.

சங்பரிவார் அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு கொண்டாட்ட திட்டங்கள், நாடெங்கும் குறிப்பாக பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் நடக்கும் மதமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு பின் நடக்கும், தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் என்பதால், தேர்தலுக்கு முன்பும், பின்பும் பா.ஜ.,வின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள், அதீத நம்பிக்கையால், உ.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற பலரும் கவலை தெரிவித்தனர்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தலில் மட்டுமின்றி, கொள்கை கூட்டாளியாக இருந்த சிவசேனா, காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றது குறித்து பலரும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். ஒரே சித்தாந்தத்தில் பயணித்தவர்களை, எதிர் சித்தாந்தம் கொண்டவர்களோடு கூட்டணி அமைத்துக் கொள்ளும் வரையிலான நெருக்கடியை அக்கட்சியினருக்கு கொடுத்திருக்கக் கூடாது என்றும் வருத்தத்தை வெளிப்படுத்தினர். அதே நேரம், காலம் காலமாக கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கும் தி.மு.க., போன்ற கட்சிகளுடன் திடீர் நெருக்கம் காட்டுவது, கவலைக்குரிய விஷயம் என கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் சொல்லி உள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் பா.ஜ., தொண்டர்களை சோர்வடையச் செய்துவிடும். எனவே, நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை முடிவு செய்துவிட்டு, அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என, பா.ஜ.,வுக்கு, சங்பரிவார் அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் அறிவுறுத்தினர்.அதேபோல, பா.ஜ., தலைமையைப் பொறுத்த வரை, இருவர் மட்டுமே பிரதானமாக இருக்கின்றனர். அவர்கள் சொல்வதே வேத வாக்காக எடுத்துக் கொண்டு மொத்த கட்சியினரும் செயல்பட வேண்டும் என்பது போன்ற இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளனர். ஒருவேளை அவர்களுடைய கரங்கள் தளர்ந்தால், அடுத்து யாரெல்லாம் முக்கியமாக இருந்து பா.ஜ.,வை வழி நடத்துவர் என்ற குழப்பமான சூழலுக்கு தொண்டர்கள் தள்ளப்படுவர். அது கட்சியின் எதிர்காலத்துக்கே பெரும் பாதிப்பை உண்டு பண்ணும் என்றும் சிலர், பா.ஜ., தலைமை குறித்த தங்களுடைய கவலைகலந்த பார்வையை வெளிப்படுத்தி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 07, 2024 12:41

தேர்தலுக்கு சில காலம் முன்பு திருநீறு அணிவதையே நிறுத்திய பழனி போன்ற அதிமுகவினர் நண்பர்கள் ..... உடாதீங்க .... கெட்டியா புடிச்சுக்குங்க ....


venugopal s
செப் 07, 2024 11:09

இதென்ன பெரிய விஷயம்? ஆதரிப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் எதிர்ப்பவர்கள் எல்லோரும் பகைவர்கள், அவ்வளவு தான்! என்ன ஒரே பிரச்சினை, நண்பர்களும் பகைவர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள்! கொள்கையாவது


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 07, 2024 13:04

யாரும் அறியாத அரிய உண்மையை நீங்கள் மட்டுமே கண்டறிந்து கூறியுள்ளீர்கள் .... உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை ......


Rasheel
செப் 07, 2024 10:51

என்னையா சொல்ல வரீங்க? பங்களாதேஷில் ஹிந்து பெண்கள் வேட்டை ஆட படுவது தெரியுமா? தேவை இல்லாத தத்துவம்


Nadanasigamany Ratnasamy
செப் 07, 2024 10:43

தி.மு.க. வினர் செய்த ஊழல்களின் மொத்த விபரமும் பி.ஜே.பி கையில் இருக்கிறது. ஓட்டு மொத்தமாக அத்தனைபேரையும் உள்ளே தள்ளிவிட்டு ஆட்சியை கவர்னரிடம் ஒப்படைக்கவேண்டும். அவர்களின் சொத்துக்கள் முழுவதையும் தமிழக அரசின் திறைசேரியில் கஜானா சேர்க்கவேண்டும். தி.மு.க. பணத்தை இறைத்தே வெல்கிறது. இதுபோன்று மற்றைய மாநிலங்களிலும் செய்து ஊழல் அற்ற நாடாக இந்தியாவை மாற்றவேண்டும். சிங்கப்பூரில் உள்ளதுபோன்று ஒரு "நல்நோக்குச் சர்வாதிகாரம்" இந்தியாவுக்கும் வேண்டும். அது மோடியால் மட்டுமே முடியும். நான் கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழன். I am a 75 year old retired Petroleum Geologist. I have been observing and monitoring the Indian Politics for the past 60 years.


sridhar
செப் 07, 2024 09:01

எஸ், Vajpayee committed a blunder by aligning with dmk due to his estrangement with admk. It is still a blot in BJP's history. The same blunder should not be committed a second time whatever be the political compulsions .


Raja Vardhini
செப் 07, 2024 08:58

பேசுவதெல்லாம் பொய்.. பித்தலாட்டம்... தமிழக பி.ஜே.பியை முட்டுசந்துக்கு கொண்டுபோன மிக மோசமான பேர்வழி இந்த அண்ணாமலை.நன்றாக இருந்த அதிமுக கூட்டணியை உடைத்ததன் பலனை அனுபவிக்க போகிறார். கருணாநிதி சமாதியில் அண்ணாமலை, ராஜ்நாத்சிங், முருகன் ஆகியோர் பயபக்தியுடன் கும்பிட்டனர்.


ராஜன்,அடைக்கலபுரம்
செப் 07, 2024 10:39

இப்படி கடைசிவரை திமுகவிற்கு முட்டுக் கொடுத்து காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் உனக்கு விதிக்கப் பட்ட சாபம்


KRISHNA
செப் 07, 2024 11:58

அண்ணாமலை பொய் சொல்லவில்லை. நீங்கள் தான் விஷயம் தெரியாமல் COMMENT போடுகிறீர்கள். தமிழ் நாடு பாஜக கட்சியை வளர்ப்பதற்காக, அண்ணாமலை அதிமுக கூட்டணி இல்லாமல், போட்டி இட்டார். இப்போது அண்ணாமலை 11.24% ஒட்டு பெற்று சாதித்து காட்டினார். அதிகமான சதவிகித ஓட்டுக்களை பெற்று, நிரூபித்து காட்டி, அதன் பின்னர் தான், அதிமுக உடன் கூட்டணி வைக்கும் போது, அதிகமான சீட்களை பெற முடியும். இதன் மூலம், ஆட்சி பிடிக்கும் அளவுக்கு கட்சி வளரும். இல்லையென்றால் NOTA கட்சி என்று வெளி நாட்டு,உள்நாட்டு தீய சக்திகளிடமிருந்து, பாரதத்தை காப்பாற்றி கொண்டிருக்கிற BJP கட்சியை ரொம்ப அறிவாளி மாதிரி திராவிட காட்சிகள் மற்றும் திராவிட பத்திரிகையாளர்கள் கிண்டல் செய்வார்கள். நோயிலிருந்தும், கொடுமையான வலியிலிருந்தும் நம்மை காப்பாற்றிய டாக்டரை நாமே கிண்டல் செய்தால், கடவுளுடைய சட்டங்கள் நமக்கு பெரிய தண்டனை கொடுக்கும். என்னுடைய சிறிய அறிவுக்கு எட்டியவரை, திமுக விழாவில் மத்திய பாஜக கலந்து கொண்டது பெரிய தவறு என்று எனக்கு தோன்றுகிறது.


S.L.Narasimman
செப் 07, 2024 07:55

பட்டவர்த்தனமான கருத்துக்கள். சில மாநில தலைவர்களின் முட்டாள்தனமான திட்டங்களை நம்பி சென்றதேர்தலில் பிசெபி உள்ளதும் போச்சு நொள்ள கண்ணான்னு மைனாரிட்டி கவெர்மெண்டுங்கிற நிலைமை. எதிரி யார் நண்பர் யாருன்னு கணிக்க தெரியாத தலைகனம் கொண்ட தலைவர்கள் போதும் கட்சியை அழிக்க.


Lion Drsekar
செப் 07, 2024 07:45

முதலில் மனிதனை மனிதனாக பார்க்கவே தவறிவிட்டதே இந்த காலம், பிறகுதான் பகைவர் , காட்டில் உள்ள விலங்குகள் கூட சிங்கம் கரடியோடு புணர்வதில்லை, கரடி ஓநாயோடு புணர்வதில்லை, உணவுக்காக மட்டுமே வேட்டையாடுகின்றன, அவைகள் அந்த இனத்தையே அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கொலை செய்வதில்லை, ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக சென்றுவிட்டது, இதை ஒழிக்கவேண்டும் என்றால் ஒரேவழி பள்ளியிலேயே ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும், மனித நேயத்தை வளர்க்கவேண்டும், அது நடக்கப்போவது இல்லை, வந்தே மாதரம்


Kasimani Baskaran
செப் 07, 2024 06:56

வெட்டி வேலைகள் செய்யாமல் முழு நேர மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.


புதிய வீடியோ