மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
5 hour(s) ago | 5
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago
சென்னை:இரண்டாவது மாஸ்டர் பிளான்படி, புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியாக, 27 கிராமங்களில் உள்ள, 34,000 ஏக்கர் நிலத்தை வகைப்படுத்தியதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பஞ்சாயத்து ஒன்றியத்தில், அலமாதி கிராமத்தில், 'குளோபல் வேஸ்ட் ரீசைக்ளைர்ஸ்' நிறுவனம், 2008ம் ஆண்டில் 1.21 ஏக்கர் நிலம் வாங்கி, மூலப்பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்கு கட்டியது; அலுவலக கட்டடமும் கட்டப்பட்டது. இதற்கு, முறைப்படி அனுமதியும் பெற்றிருந்தது.சி.எம்.டி.ஏ., 'நோட்டீஸ்'
இந்நிலையில், அனுமதியின்றி கட்டுமானம் எழுப்பியிருப்பதாக கூறி, கட்டடத்துக்கு, 'சீல்' வைத்து, அதை இடிக்க, சி.எம்.டி.ஏ., 'நோட்டீஸ்' அனுப்பியது. இதை எதிர்த்து, வீட்டுவசதி துறை செயலரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் கட்டடம் கட்டியிருப்பதாக கூறி, மனுவை, வீட்டுவசதி துறை நிராகரித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விரிவான மனுவை அளிக்கவும், அதை வீட்டுவசதி துறை பரிசீலித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. மீண்டும் அளித்த மனுவையும், வீட்டுவசதி துறை செயலர் நிராகரித்து, 2017 ஏப்ரலில் உத்தரவிட்டார்.வீட்டுவசதி துறை செயலரின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் குளோபல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதேபோன்று, 'பி.டி.என்டர்பிரைசஸ்' நிறுவனமும் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தன. நிறுவனங்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் எம்.கே.கபிர், பி.வில்சன் ஆஜராகினர்.மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வாதாடியதாவது:புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி என, 34,000 ஏக்கர் நிலத்தை அறிவித்து, நீர்பிடிப்பு மேலாண்மை ஏஜன்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இடைக்கால அறிக்கை
இதற்கு எந்த வழிமுறையும் இல்லை. முறைப்படி திட்ட அனுமதி பெற்றே, கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. கட்டடத்தை இடிக்கும்படி நோட்டீஸ் பெற்ற பிறகே, சென்னை பெருநகர பகுதிக்கான இரண்டாவது மாஸ்டர் பிளான் குறித்த தகவல் தெரியும்.மாஸ்டர் பிளானில் உள்ள 27 கிராமங்கள், நீர்பிடிப்பு பகுதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலான பகுதிகளில் கட்டுமானங்கள் உள்ளன.அரசு கட்டடங்கள், வணிக கட்டடங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. இந்த நிலங்கள் எல்லாம், நீர்பிடிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. எங்கள் விண்ணப்பங்களை நிராகரித்தது, விதிமுறைகளுக்கு முரணானது.இவ்வாறு அவர்கள் வாதாடினர்.மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதியில், நகரமயமாக்குதலால் ஏற்படும் தாக்கம் குறித்தும், நகரமயமாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்ட நிபுணர் குழு, இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நிலங்களை வகைப்படுத்தியதை மறுஆய்வு செய்வதாகவும், நீர்பிடிப்பு பகுதியில் வளர்ச்சிப்பணி குறித்து புதிய விதிமுறைகளை ஏற்படுத்துவதாகவும், அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.உள்கட்டமைப்பு வசதி
எனவே, நிபுணர் குழுவின் இறுதி அறிக்கைக்கு பின், விதிமுறைகளை மறுஆய்வு செய்ய, அரசு முடிவெடுத்திருக்கும் போது, தற்போதைய அரசு உத்தரவை அனுமதிக்க முடியாது. மாஸ்டர் பிளானுக்கு முரணாக அரசு உத்தரவு உள்ளது. அதனால், 2017 ஏப்ரலில் பிறப்பித்த அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இரண்டாவது மாஸ்டர் பிளான் படி, நீர்பிடிப்பு பகுதியாக, 34,000 ஏக்கர் நிலத்தை வகைப்படுத்தியது சட்டவிரோதமானது.இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்றும் நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை கருத்தில் எடுத்து, மாஸ்டர் பிளானை திருத்தி அமைத்துக் கொள்ளலாம்.சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அதிகாரவரம்பு உள்ள பகுதியில், நீர் நிலைகள் பாதுகாப்பை உறுதி செய்ய, நிபுணர்களுடன் ஆலோசித்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
5 hour(s) ago | 5
16 hour(s) ago | 1
16 hour(s) ago