உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்றே சொன்னது தினமலர் : கோவை மேயர் ராஜினாமா ஏன்?

அன்றே சொன்னது தினமலர் : கோவை மேயர் ராஜினாமா ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபா தேர்தல் முடிந்து விட்டதால், தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் மேயர்கள் மாற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் கோவை மேயர் கல்பனா இன்று ராஜினாமா செய்துள்ளார்.கோவை மேயர் ராஜினாமா குறித்து கடந்த மாதம் 16-ம் தேதி தினமலரில் ‛‛பல மாநகராட்சிகளில் விரைவில் மேயர்கள் மாற்றம் '' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.தமிழகத்தில் கடந்த 2022 ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., கூட்டணி பெருவாரியான உள்ளாட்சிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்களே மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதிலும் மிக முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று பெரிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. கட்சியிலும், வயதிலும் அனுபவம் இல்லாதவர்களாக இருந்ததால், கட்சியில் சீனியர்களுக்கும், குறிப்பாக கட்சி நிர்வாகிகளுக்கும் அவர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.உதாரணமாக, கோவை மாவட்டத்தில் தி.மு.க., வுக்கு ஒரு எம்.எல்.ஏ.,வும் இல்லாத நிலையில், மேயராக நியமிக்கப்படும் நபர் பற்றி பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.கோவை மேயராக நியமிக்கப்படுபவர், மாநகர வளர்ச்சிக்கு உதவுவதோடு, கட்சியின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, கட்சி நிர்வாகிகளிடம் இருந்தது. ஆனால் கோவையில் புதிய மேயராக பொறுப்பேற்ற கல்பனா மீது, ஆரம்பத்திலிருந்தே விதவிதமான புகார்கள் குவிந்தன. அவருடைய செயல்பாடுகள், பேச்சுக்கள் குறித்த பல்வேறு வீடியோக்கள், ஆடியோக்கள் வெளியாகின.

பல இடங்களில், அவருக்கும், மண்டலத்தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கும் இடையில் பகிரங்கமாகவே மோதல் நடந்தது. இவையனைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாக சந்தி சிரித்தன. அத்துடன், அவர் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பதே இல்லை என்று கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள், தலைமை வரையிலும் புகார்களைக் குவித்தனர். மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்தது. தேர்தலுக்கு முன்பாக, மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்களை மாற்றினால் அதுவே பெரும் சர்ச்சையாகும்; எதிர்க்கட்சியினர் விமர்சிக்க வழிவகுக்கும் என்று, தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகக் கூறப்பட்டது.இந்நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kulandai kannan
ஜூலை 04, 2024 08:07

பெண்களுக்கு ஒதுக்கீடு தேவையற்றது.


Sivagiri
ஜூலை 03, 2024 22:34

எலெக்சன் முடிஞ்சவுடன் , தீயமுகாவை அழிப்பேன் என்ற மோடியின் சபதம் , ஆரம்பிக்க போகிறது ...


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 03, 2024 22:16

தீயமுகவிற்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு இவர் சூன்யம் வைப்பர்.


Raghavan
ஜூலை 03, 2024 21:42

ஒழுங்காக அமைச்சர்களுக்கு கப்பம் கட்டியிருந்தால் இந்த பிரச்சனை வந்தே இருக்காது. அமைச்சர்களும் மேலிடத்திற்கு அவர்களுக்குண்டான பங்கை கொடுத்த விஷயத்தை சரிபண்ணியிருப்பார்கள். பிழைக்கத்தெரியாத மேயரோ என்னவோ பாவம்


GMM
ஜூலை 03, 2024 21:34

முன் காலத்தில் கட்சி அதிகாரம் கருணாநிதி பாதி அன்பில், வீரபாண்டி ஆறுமுகம்... பாதி இருக்கும். ஸ்டாலின் பொறுப்பில் கட்சி அதிகாரம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. யார் இயக்குகிறார் என்று தெரியவில்லை. மற்றவர்களை பார்த்து மேயர் காப்பி அடித்து இருந்தால், பதவி ராஜினாமா செய்ய வேண்டி இருக்காது. நல்ல முடிவு. திமுகவை காங்கிரஸ், பிஜேபி மட்டும் தான் எதிர்க்க முடியும்.


lana
ஜூலை 03, 2024 21:16

மேயர் மாறினால் என்ன. எந்த மாற்றமும் இருக்காது புதியவர்கள் அவர் பங்குக்கு கொள்ளை அடிப்பார்கள்


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 20:50

கப்பம் தவிர வேறெந்த காரணத்துக்காகவும் திமுக வில் மாற்றம் என்பதை நம்பமுடியவில்லை.


sankaranarayanan
ஜூலை 03, 2024 20:20

சென்னைமாநகருக்கு யார் மேயர் என்றே தெரியல்லியையே இப்போது எங்கு இருக்கிறரார். எந்த நிகழ்ச்சிகளிலும் அவரை காண்பதில்லையே என்ற ஆதங்கத்தில்தான் மக்கள் அவதிப்படுகிறார்கள்


கோவிந்தராஜ்
ஜூலை 03, 2024 20:19

சரியான கணிப்பு


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி