உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4 கோடி விவகாரம் சுயேச்சை மனு தள்ளுபடி

ரூ.4 கோடி விவகாரம் சுயேச்சை மனு தள்ளுபடி

சென்னை:சென்னை தாம்பரத்தில், 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.லோக்சபா தேர்தலின் போது, சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது. பணத்தை பறிமுதல் செய்து, பணம் வைத்திருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். பின், இந்தச் சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் அலுவலகத்தில் வைத்திருந்த 28.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகைகள் பறிமுதல் குறித்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி லோக்சபா தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ராகவன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், ''பணம் பறிமுதல் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது,'' என்றார். அதுகுறித்த பதில் மனுவையும் தாக்கல் செய்தார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். விரிவான உத்தரவை, பின்னர் பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை