உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசை கண்டித்து தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள, மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும் என, தி.மு.க., அறிவித்து உள்ளது.தி.மு.க., சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., தலைமையில், மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. அதில், மத்திய அரசால் அமல் செய்யப்படும் மூன்று குற்றவியல் சட்டங்கள், நீதி பரிபாலனம், மாநில சுயாட்சி, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின், மூன்று கட்ட போராட்டங்கள் நடத்துவது என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் விபரம்:* வரும் 5ம்தேதி மாவட்ட நீதிமன்றங்கள் முன், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் ஒன்றிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது* வரும் 6ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது* குற்றவியல் சட்டங்களின் பாதகங்களை வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அறியும் வகையில், தமிழகம் முழுதும் கண்டன கருத்தரங்குகள் நடத்துவது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ram
ஜூலை 02, 2024 12:38

கோவை சிலிண்டர் ப்ளாஸ்ட் என்று சொன்ன போதே இந்த திருட்டு திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்து இருக்கணும் இதுவே இத்தாலி காங்கிரெஸ்ஸாக இருந்தால் ஒன்று டிஸ்மிஸ் or அவனுக சொல்லுவதை திருட்டு திமுக ஆட்கள் கேட்கணும் என்று சொல்லிவிடுவார்கள். பிஜேபி இந்த விஷயத்தில் lkg ஆட்கள். அமித் ஷா இருக்கும் வரை திருட்டு திமுக ஆட்கள் டான்ஸ் ஆடுவார்கள்.


sridhar
ஜூலை 02, 2024 11:08

குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை தரும் சட்டங்களை கடுமையாக எதிர்ப்போம்.


ஆரூர் ரங்
ஜூலை 02, 2024 10:33

போதைப் பொருள் விற்பனைக்கு விரைவான விசாரணை, கடும் தண்டனை என்பதெல்லாம் கட்டுமர வாரிசுகளுக்கு திகிலை உண்டாக்குவது எதிர்பார்க்கக் கூடியதே. போராட்டம் தற்காப்புக்காகதான்.


R.MURALIKRISHNAN
ஜூலை 02, 2024 09:20

திருடனுகளுக்கு மட்டுமே தேள் கொட்டிய மாதிரி இருக்கும். திமுக உலகத்துக்கே ஆகாத ஒன்று


duruvasar
ஜூலை 02, 2024 08:32

எவனுக்கும் ஏறாத சூடு இவனுங்க ளுக்கு ஏறுதே ஏன் ? ரவுடி கும்பல்களின் கொட்டத்தை அடக்க சட்டம் வந்தால் அவர்கள் பொங்குவது இயற்க்கையே.


karunamoorthi Karuna
ஜூலை 02, 2024 08:14

புதிய சட்டங்களால் பொது மக்களுக்கு நல்லது ஆனால் திருடிய அரசியல் வாதிகளுக்கு கெட்டது ஜாமீன் வாங்கினாலே வழக்கு வெற்றி பெற்று நிரபராதி என்று தீர்ப்பு வந்த மாதிரி கூவும் அரசியல் வாதிகளுக்கு ஆப்பு தான் புதிய சட்டங்கள்


Svs Yaadum oore
ஜூலை 02, 2024 08:13

செங்கோலை பற்றி இப்படி கேவலமாக பேசறார் ....


Svs Yaadum oore
ஜூலை 02, 2024 07:51

செங்கோல் என்பது எதேச்சாதிகாரத்தின் சின்னம் என்பது ...க்கு கூட புரியும் ....


Svs Yaadum oore
ஜூலை 02, 2024 07:48

செங்கோல் வைத்திருந்த மன்னன் ... என்று இங்குள்ள மன்னர் பற்றி படு கேவலமாக பேச்சு .....இதுக்கு வோட்டு போடும் மதுரை மக்கள் ...தமிழனை படு கேவலமாக விமர்சனம் .....தமிழ் தமிழன் தமிழன்டா ....


Duruvesan
ஜூலை 02, 2024 07:46

இது மட்டும் இல்ல இனி நீட், ஹிந்தி, போராட்டம் எல்லாம் வரும், கள்ள சாராயம் சாவுகள் திசை திருப்புவோம், இனி செய்தி சேனைல்கள் இதை மட்டும்தா ஒளி பரப்பும். விடியல் ராஜ தந்திரி. எவனோ எப்படியோ நாசமா போகட்டும், நாங்க நல்லா இருக்கணும் இது தான் கட்டுமர குறிக்கோள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை