உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்களை திமுக ஏமாற்ற முடியாது: சொல்கிறார் அண்ணாமலை

இளைஞர்களை திமுக ஏமாற்ற முடியாது: சொல்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திமுகவின் தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது.' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஆக இது இருக்கும். என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f8sin06r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது இந்தாண்டின் சிறந்த நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது; கோவையில் 3 ஆண்டுகளாக திமுகவால் புதிய பஸ் நிலையமே அமைக்க முடியவில்லை. திமுகவின் தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

எனக்கு ஓட்டு அளியுங்கள்

திருப்பூர் வடுகபாளையம்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: உங்கள் வீட்டு பிள்ளை எனக்கு ஓட்டு அளியுங்கள். பிரதமர் மோடி கொடுக்கக் கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாகவே வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். நான் வெற்றிபெற்றால் ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டுவந்தே தீருவேன். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன். எல்லா பிரச்சனைகளையும் உற்று பார்த்து விட்டேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் மாற்றி காட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பாமரன்
ஏப் 08, 2024 01:25

பாருங்க மக்களே சந்தடி சாக்கில் "" என் பேரு மீனாக்குமாரி "" பஸ்ல ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்ததை தமிழ்நாடு பூரா நடந்து போனதா சொல்றாப்ல நம்மாளு எப்பவாவது உண்மை பேசுவாருன்னு பார்த்தால் ம்ம்ஹூம் ?


பேசும் தமிழன்
ஏப் 07, 2024 20:42

இப்போதைய இளைஞர்கள் கொஞ்சம் விவரமான ஆட்கள்.... திமுக சொல்லும் பொய்யை நம்ப தயாராக இல்லை..... முன்பு போல பொய் சொல்லி அவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்க வேண்டாம்.


saravanan
ஏப் 07, 2024 17:15

-க்கு பிறகு எழில் நகரமாம் கோவை இழந்த தன் பெருமையை மீண்டும் பெற இன்றளவும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது பெருகி வரும் மக்கள் தொகை ஒருபக்கம், வாகன பெருக்கம் மறுபக்கம், சுவையிழந்து குன்றிவிட்ட சிறுவாணி ஆற்றுநீர், சுணக்கமடைந்த சிறுகுறு தொழில்கள் இதையெல்லாம் நன்குணர்ந்த, குறைகளை விரைந்து களையும் ஒரு முன்னோடி தலைமையே தற்போதைய இளைஞர்களின் அவரச தேவை இத்தனை காலம் ஆண்டவர்கள் என்ன செய்தனர் என்பது கோவை மக்களுக்கே தெரியும் அதனால் மாற்றம் உறுதி


J.V. Iyer
ஏப் 07, 2024 16:51

மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்! தமிழகத்தில் எல்லோரும் மாற்றத்தை எதிர்பார்த்து ஏங்குகிறார்கள்!


rksethuram
ஏப் 07, 2024 16:50

சரி தான் ஆனால் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் சில்லறை காசிற்கும் கூடும் கூட்டம் அதிகமான இளைஞர்கள் கூட்டமாக இருக்கே இந்த நிலையை இந்தியா முழுவதும் மாற்ற வேண்டும்


முருகன்
ஏப் 07, 2024 15:59

தமிழகம் செலுத்தும் பல மடங்கு வரிக்கு பெயருக்கு சில திட்டங்களை அளிக்கும் மத்திய அரசு பற்றி இளைஞர்கள் அறிவார்


Rpalnivelu
ஏப் 07, 2024 16:51

திருட்டு திராவிட நிர்வாகம் தெரியாது நிதி நிர்வாகம் தெரியவே தெரியாது விஞ்ஞான ஊழலும் மக்களை சுரண்டிப் பிழைப்பது மட்டும் நன்றாகவே தெரியும் உங்களை போன்ற இருக்கும் வரை அவர்களுக்கு கவலையே இல்லை


hari
ஏப் 08, 2024 10:34

பிரசாந்த் கிஷோரே சொல்லிட்டாரு... போவியா முருகா


ديفيد رافائيل
ஏப் 07, 2024 15:46

இளைஞர்களை ஏமாற்ற முடியும்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி