உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் கமிஷன் மீது தி.மு.க., வழக்கு

தேர்தல் கமிஷன் மீது தி.மு.க., வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இவிஎம்' எனப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் புதிய டிசைனை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அளித்த பேட்டி:ஓட்டு போடும் இயந்திரத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று வாக்காளர்கள் பட்டனை அழுத்தும் பகுதி. இதை பேலட்டிங் யூனிட் என்கிறோம். இன்னொன்று இந்த இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட். இந்த இரண்டு யூனிட்களும் ஒன்றுடன் ஒன்று நேரடி இணைப்பில் இருக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதி கூறுகிறது. ஆனால், இந்த தேர்தலில் எம்3 என்ற புதிய ஓட்டிங் மெஷினை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்கிறது. அதில் பேலட்டிங் யூனிட்டுக்கும், கன்ட்ரோல் யூனிட்டுக்கும் நடுவில் ஒரு கருவி வைக்கப்படுகிறது. நாம் செலுத்திய ஓட்டு சரியாக பதிவு செய்யப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள வசதியாக, சிறு தாளில் அவரது ஓட்டுப்பதிவை அச்சிட்டு காட்டும் பிரின்டர் அது. விவிபேட் என்கின்றனர். வேட்பாளருக்கு உரிய சின்னத்தை அவரது பெயருக்கு நேராக பதிவேற்றும் சிம்பல் லோடிங் யூனிட் என்ற கருவியை இந்த பிரின்டரில் பொருத்தி உள்ளனர். இதனால், பேலட்டிங் யூனிட்டுக்கும், கன்ட்ரோல் யூனிட்டுக்கும் நேரடி இணைப்பு இல்லாமல் போகிறது. வாக்காளர் எந்த பட்டனை அழுத்தினார் என்ற தகவலை பேலட்டிங் யூனிட்டுக்கு பதிலாக, பிரின்டர் தான் கன்ட்ரோல் யூனிட்டுக்கு அனுப்பும். இப்படி நடுவில் ஒரு யூனிட்டை வைப்பதால் இயந்திரங்களின் தகவல் பரிமாற்றத்தில் குளறுபடி ஏற்படலாம் அல்லது ஏற்படுத்த முடியும். தேர்தல் கமிஷனும் இதை மறுக்கவில்லை. 2 சதவீதம் வரை தவறு நடக்க வாய்ப்பு உள்ளதாக ஒப்புக் கொண்டது.இது, விதிகளுக்கு எதிரானது என்பதையும் தலைமை தேர்தல் கமிஷனரிடம் தெரிவித்தோம்; பதில் வரவில்லை. எனவே, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை ஏதாவது சில சாவடிகளில் மட்டும் எடுத்து எண்ணாமல், அனைத்து சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று கமிஷனுக்கு ஆணையிட வேண்டும் என்பதையும் கோரிக்கையாக வைத்துள்ளோம். மக்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த சந்தேகம் இருந்தால் தேர்தலே அர்த்தமற்று போய்விடும். சந்தேகத்தை போக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sethu
ஏப் 04, 2024 11:08

திமு க விற்கு என ஒரு குணம் உண்டு தான் ஜெயிப்போம் என்றால் கம்முனு இருப்பார்கள் ஆனால் மாமாக்கு ஜெயிப்பது கடினம் என்று தெரிந்தால் வூரை கூப்பிட்டு ஒப்பாரி வைப்பதுபோல நடிப்பார்கள் , ஜெயித்தால் லாபம் தோத்தால் நாங்கள் சந்தேகப்பட்ட்து சரியானதுதான் என கோசம் போடுவார்கள் டெங்கு மலேரியா போல தி மு க வை ஒழிக்கணும்


sridhar
ஏப் 04, 2024 11:08

எதற்கெடுத்தாலும் azhugai Chee kozhaigal


Sampath Kumar
ஏப் 04, 2024 09:55

இது தேர்தல் ஆணையத்தின் நம்பக தன்மையை கேலி கூத்து ஆகி விட்டது எதிர் கட்சி அனைவரும் இந்த வோட் மெஷின் வகை ஏதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும் உடனடியTக இதை நிறுத்த வேடும் இது காலத்தின் கட்டாயம் பழைய பேர் முறையை கொண்டு வர வேண்டும் அப்படி கொண்டு வந்தால் பிஜேபி ஜெய்காது என்று தேர்ந்து தான் இந்த வோட் மெஷினில் நடந்து உள்ளது உச்ச நீதி மன்றம் தாமாக முன்வந்து இந்த வலக்கை விசாரிக்க வேண்டும் எத்தனையோ வழுக்கிகளில் முன்ன வந்து விசாரித்த நீதி மன்றம் நாட்டின் இறையாண்மை உள்ள அனைவர்க்கும் ஏமாற்றமே


sridhar
ஏப் 04, 2024 11:10

காங்கிரஸ் காலத்தில் தான் மின் வாக்கு முதலில் பயனுக்கு vandhadhu பாவம் , உங்க விஷய ஞானம் அவ்வளவு dhaan


GMM
ஏப் 04, 2024 08:13

EVM , control unit நடுவே VVPAT தான் வாக்கு பதிவை சீட்டில் பிரிண்ட் செய்யும் இதை வற்புறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நூறு சதவீதம் தேவை என்றால், EVM, VVPAT, control unit தேவை இல்லை தகவல் பரிமாற்றத்தில் குளறுபடி ஏற்படலாம் அல்லது ஏற்படுத்த முடியும் எப்படி? திமுக கூட்டணி வெற்றி மங்கி வருகிறது? யூக அடிப்படையில் மனு கூடாது தேர்தலை தடுக்க தோல்வி கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன..


ramani
ஏப் 04, 2024 07:02

தேர்தல் இயந்திரத்தின் மீது மக்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை எதிர்பாளர்களுக்கு தோல்வி பயத்தில் முன்பே கேனை கூறைகூன்றனர்


duruvasar
ஏப் 04, 2024 07:01

இன்னிக்கே கம்பி கட்டுற வேலையை ஆரம்பிச்சிட்டாங்க தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் நடந்த ௨௦௨௧ தேர்தலை ரத்து செய்யசொல்லி இப்போது மீண்டும் மாநில தேர்தலில் போட்டியிட திராவிட மாடல் ரெடியா ? மாநில


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி