உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

சென்னை:விக்கிரவாண்டி தொகுதி இடை தேர்தலுக்கான திமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை மாதம் 10 ம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. திமு.க வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்படு உள்ளார். இதனை தொடர்ந்து திமுக சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி அமைச்சர்கள் பொன்முடி ,ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு,கே.என்.நேரு. சக்கரபாணி,தா.மோ. அன்பசரசன்,சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ், சி.வி.கணேசன், லட்சுமணன், உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் வரும் 14-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிவா
ஜூன் 12, 2024 23:12

இந்த 11 நபர்களும் ஒரு மாத சம்பளத்தை வேண்டாமென சொல்வார்களா? மக்கள் பணம் தான் விரையம்.


சிவா
ஜூன் 12, 2024 23:10

அப்படியே ஒரு 50 கோடி பார்சல்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை