உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியீடு

தி.மு.க., அரசின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியீடு

சென்னை:தி.மு.க., அரசின் மூன்றாண்டு சாதனை மலரை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.தி.மு.க., அரசு 2021 மே 7ல் பொறுப்பேற்றது. மூன்றாண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின், 'தமிழரசு' இதழ் சார்பில், 'தலைசிறந்த மூன்றாண்டு; தலை நிமிர்ந்த தமிழ்நாடு' என்ற பெயரில் சாதனை மலர் தயார் செய்யப்பட்டது.மூன்றாண்டுகளில் தி.மு.க., அரசு பல்வேறு துறைகளில் நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றை துறைவாரியாக தொகுத்து, மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டு உள்ளது.இம்மலரில், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி, தமிழக திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உட்பட பலர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இம்மலரை, முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை கமிஷனர் ஷோபனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் ராஜாராமன், இயக்குனர் வைத்திநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஆக 15, 2024 04:28

எந்த சாதனையை குறிப்பிட்டு சொல்வார்கள்? டாஸ்மாக், கள்ளச் சாராயம், கஞ்சா, குட்கா, ஊழல்,........ தெரியலையே.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை