உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருத்துரிமையை நசுக்கும் தி.மு.க.,: ஹிந்து முன்னணி கண்டனம்

கருத்துரிமையை நசுக்கும் தி.மு.க.,: ஹிந்து முன்னணி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : தமிழகத்தில் கருத்துரிமையை தி.மு.க., அரசு நசுக்கி வருவதாகவும், அதற்கு காவல்துறை துணை போவதாகவும் ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

கடந்த, மூன்றாண்டு தி.மு.க., ஆட்சியில் ஆளும் கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக,தி.மு.க., வினர் கொடுத்த புகாரின் பேரில் ஏராளமானவர்களை கைது செய்தும், வழக்கு பதிவு செய்தும் உள்ளது, தமிழக காவல்துறை. சிலரை வெளிமாநிலங்களுக்கு சென்று கூட, பயங்கரவாதிகளை போல கைது செய்து வந்தது. இதுபோன்ற வழக்குகளுக்கு கைது தேவையற்ற நடவடிக்கை என, சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்தது. சமீபத்தில் பிரபல 'யுடியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ச்சியாக, தி.மு.க., அரசின் ஊழல்களையும், நிர்வாக சீர்கேட்டையும் விமர்சித்து வந்தார். காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் பற்றி ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாகவும், அந்த வகையில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியுள்ளது. சவுக்கு சங்கர் அவதுாறான கருத்துக்களை பொதுவெளியில் பேசியிருந்தால், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில், யாருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இருக்க போவதில்லை. ஆனால், தி.மு.க., அரசு அவரை கைது செய்த விதமும் கொண்டு சென்ற போது, நடந்த விபத்தும், புது வகையான, என்கவுன்டர் நிகழ்வா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அரசும், காவல்துறையும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, தி.மு.க., அரசின் குறைகளை விமர்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, எதிரான விமர்சன குரல்வளையை நசுக்கும் அராஜக போக்கை தொடர்ந்து தி.மு.க., அரசு செய்து வருகிறது. ஊழல் வழக்கில் கைதான தி.மு.க., அமைச்சர்களுக்காக ஓடோடி வந்த மாநில மனித உரிமை ஆணைய தலைவர் இவ்விவகாரத்தில் மவுனம் சாதிப்பது தி.மு.க., அரசின் துஷ்பிரயோகம்.எனவே, சவுக்கு சங்கர் விஷயத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டும். தி.மு.க., அரசின் தொடர்ச்சியான மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளை மக்கள் திரண்டு, ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்து தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

K.n. Dhasarathan
மே 11, 2024 13:42

ரொம்ப கவலைப்படாதீங்க காடேஸ்வர, நீங்க தான் சொல்லீட்டிங்க இல்லை, தனி மனித தாக்குதல், அதனால்தான் சவுக்கு இப்போ உள்ளே, இதுபோல பேசினால் சவுக்கு மட்டும் அல்ல, எந்த தேக்கும் உள்ள போகவேண்டியதுதான், அவர் பேச்சை கேட்டிங்களா? அதுபோல ஒரு முதல்வரை பேசலாமா? அவரை தியாகி லெவெலுக்கு கொண்டு போகாதீங்க, நீங்களும் ரொம்ப கவலைப்பட்டு உடம்பு இலைச்சீராதீங்க


என்றும் இந்தியன்
மே 10, 2024 17:25

இந்துக்களுக்கு கருத்துரிமை கிடையாது திருட்டு திராவிட மடியல் ஏசு அரசு ஆட்சியில்


Vasu
மே 10, 2024 16:24

உள்ளே வைத்து அடித்த எல்லாருமே போலீஸ் இல்லை போலீஸ் உடுப்பில் அடித்த பலர் திமுக ரவுடிகள் பின்ன சர்வாதிகாரி + கூடுதல் டிஜிபி சப்போர்ட் இருந்தால் அராஜக தி மு க ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்


subramanian
மே 10, 2024 14:28

ரகசிய காப்புரிமை பிரமாணம் மீறப்பட்டுள்ளது


Ramesh Sargam
மே 10, 2024 12:31

கருத்துரிமையை நசுக்கினாலும், சரக்கு அடிக்கும் உரிமை, போதைப்பொருள் உபயோக உரிமை அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள் அதை பாராட்டுவீர்களா??


Svs Yaadum oore
மே 10, 2024 12:28

பாவம் உபிஸ்கள்


அசோகன்
மே 10, 2024 11:45

கஞ்சா சிந்தட்டிக் drug உலக அளவில் விற்பனை செய்வதே திமுக உறுப்பினர்கள் அதை ஏதுவாக மறைத்து ஏதோ சவுக்குதான் கஞ்சாவை தமிழ் நாட்டில் விற்பதுபோல் 200 ரூபாய்க்கு கூவும் உபி ...... உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா.....


nsathasivan
மே 10, 2024 10:55

இது போல் பல திமுகவினர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை குறிப்பாக பிஜேபி கட்சித்தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்யும் போது புகார் அளித்தாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏனோ?


திகழ்ஓவியன்
மே 10, 2024 12:26

இது எங்கள் ஆட்சி அப்படி தான் செய்வோம்


செந்தமிழ் கார்த்திக்
மே 10, 2024 09:53

ஆமா அவரு பெரிய சுதந்திர போராட்ட தியாகி, இவரு வந்து முட்டு குடுக்குறாரு


செந்தமிழ் கார்த்திக்
மே 10, 2024 09:49

கஞ்சா சங்கருக்கு வக்காலத்து வாங்குறவன் எல்லாம் யார் யாருனு பாத்தா முதல் வரிசையில உக்காந்து கைய்ய தூக்கிறவன் அதிமுக காரன் பணத்தை இன்வெஸ்ட் பண்ணி தொலைச்சிட்டானுங்க வேற என்ன பண்ண ? ரெண்டாவது யார்ரான்னு பாத்தா வடக்கன் அடிமைகள் ஏண்டான்னு கேட்ட எங்களுக்கு திமுக பிடிக்காது, திமுக அரசை திட்ட வேற நல்ல நியூஸ் கிடைக்கல அதான்னு சொல்றானுங்க


Kasimani Baskaran
மே 10, 2024 11:05

நீங்க ஏன் கதறுரீங்க?


subramanian
மே 10, 2024 14:21

ரூபாய் அடிமை உனக்கு எதுவும் புரியாது மற்றவர்கள் கருத்துக்கள் குறித்து குற்றம் சொல்ல கூடாது


என்றும் இந்தியன்
மே 10, 2024 17:29

கஞ்சா சாதிக் அது இது சவுக்கு சங்கர்


Gokul Krishnan
மே 11, 2024 11:51

கஞ்சா நிதி அவனது நண்பன் சாதிக் குறித்து வாய் திறக்காத அந்த பணத்தில் தானே ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ஓடுது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை