உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக உண்ணாவிரதம் நாம் தமிழர் கட்சி ஆதரவு: சீமான் திடீர் பாசம்

அதிமுக உண்ணாவிரதம் நாம் தமிழர் கட்சி ஆதரவு: சீமான் திடீர் பாசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக சட்டசபையில் விவாதிக்க வேண்டுமென்ற அ.தி.மு.க.,வின் கோரிக்கையை நிராகரித்து, பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் சட்டசபை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o9ot2mtt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப்படுகொலை. பா.ஜ., அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, ஜனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Thiru Moorthi S
ஜூன் 28, 2024 09:53

பூத் அளவில் கொடுப்பார்கள்... அதிமுகதான் வெற்றி தோல்வி என இருவருக்கும் பிரச்சனை...


ராமகிருஷ்ணன்
ஜூன் 28, 2024 04:05

அண்ணாமலையின் அசுர வளர்ச்சி சிமாண்டியால் பொறுக்க முடியல்லே. அடுத்த தேர்தலில் கூட்டணியில் விழுந்து விடுவான். தும்பிகள் இன்னும் எத்தனை வருடங்கள் கட்டை பஞ்சாயத்து காசை நம்பி இருப்பது. அவர்களுக்கு சுருட்டும் ஆசை வந்து விட்டதாம்.


T.sthivinayagam
ஜூன் 27, 2024 19:09

இந்தியாவில் மது போதையில் இறந்தவர்களை வட ஆன்மீக போதையில் இறந்தவர்களே அதிகம் கோவில் திருவிழா தேரோட்டம் போன்றவற்றில்தான் அதிக பேர் இறந்து உள்ளனர்


Rajesh
ஜூன் 27, 2024 16:57

சைமன் சந்தர்ப்பம் பார்த்து ஒத்து ஊதுவார் ....... என்னமோ இவரு தனித்து நின்னுதார்.... சொல்லிட்டு இப்போ எல்லா கட்சிக்கிட்டயும் ஆதரவு கேட்கிறார்


WIFR Tube
ஜூன் 27, 2024 16:48

அணைத்து கட்சிக்களும் இதை செய்யவேண்டும்


Kanagaraj M
ஜூன் 27, 2024 16:47

கள்ளசாராயத்திக்கு எதிராக யார் போராடினாலும் ஆதரவு தெரிவித்துதான் ஆகவேண்டும்.அந்த அளவுக்கு உயிர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக.


Jai
ஜூன் 27, 2024 16:42

இடை தேர்தலில் அதிமுக ஆதரவை பெறத் தான்.


கோவிந்தராஜ் கிணத்துக்கடவு
ஜூன் 27, 2024 15:48

விக்ரவான் டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க தனது ஆதரவை நாம் தமிழர் கட்சிக்கு பகிரங்கமக தெரிவிக்கலாம் இது அவசியம். முக்கியம்


r ravichandran
ஜூன் 27, 2024 17:21

சரியாக சொன்னீர்கள், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று பழமொழி. ஆனால் சீமான் நம்ப தகுந்தவர் இல்லை. அதிமுக தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்ள கூடாது.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ