உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அராஜகத்தை தட்டி கேட்டால் அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா

அராஜகத்தை தட்டி கேட்டால் அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அராஜகத்தை தட்டிக் கேட்டால், அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா; அச்சுறுத்தலுக்கு பா.ஜ., பயப்படாது,'' என, தென் சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, தென்சென்னை தொகுதி, தேனாம்பேட்டை, 13வது ஓட்டுச்சாவடியில் தி.மு.க.,வினர் கள்ள ஓட்டு போட்டதாகவும், அதை தடுக்க முயன்ற தங்கள் கட்சி ஏஜென்ட் கவுதமை தாக்கியதாகவும், பா.ஜ., புகார் எழுப்பியது. கவுதம் வீட்டிற்கு தமிழிசை, பா.ஜ., மாநில செயலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் நேற்று சென்றனர்.பின், தமிழிசை அளித்த பேட்டி:ஏற்கனவே, 122வது வார்டில், 13வது ஓட்டுச்சாவடியில் தவறு நடந்தது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. கவுதம் வீட்டிற்கு, குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து, அச்சுறுத்தும் வகையில் கேள்வி கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் வீட்டில் பம்பு தான் உள்ளது. எந்த கட்டுப்பாட்டும் இல்லாமல், பலருக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதை விட்டு விட்டனர். பா.ஜ.,வுக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது. ஜாதியை வைத்து தி.மு.க., தான் அரசியல் செய்கிறது. கவுதமை மிரட்டிய அதிகாரிகள், அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அராஜகத்தை தட்டி கேட்டால், அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா; அச்சுறுத்தலுக்கு பா.ஜ., பயப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்புசாமி
ஏப் 26, 2024 11:26

கெவுனர் பதவியோட அதிகாரமெல்லாம் போயிடிச்சு..


Sampath Kumar
ஏப் 26, 2024 09:13

ஏங்க இப்படி பொங்குறீங்க எல்லாம் உங்க பாணி அரசியில் தான் நீங்க அமலாக்க துறையை வைத்து மிரட்டும் பொது நாங்க அதை பின்பற்றுகிறோம் ஹுக்கும் ஆசை தோசை அப்பளம் வடை போக்க போய் வேறு வேலையை பாருங்க


தமிழ்
ஏப் 26, 2024 07:56

இதை ஒரு யோக்கியமான கட்சிக்காரன் சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம்.


VENKATASUBRAMANIAN
ஏப் 26, 2024 06:36

இதுதான் திராவிட மாடல் திமுக என்றாலே அராஜகம் ரௌடித்தனம் எல்லாம் உண்டு


rajan
ஏப் 26, 2024 06:08

அமலாக்கத்துறை, சிபிஐ, நிலா, இட் போன்றவற்றை ஏவிவிடுதல் பிஜேபி கொள்கை என்று தமிழிசை சொல்லுகிறார்


Kasimani Baskaran
ஏப் 26, 2024 06:03

ரெளடிகளை வைத்து மிரட்டுவது தீம்காவின் வாடிக்கை கள்ள ஓட்டு போட்டுள்ளதால் வேறு மாநில அதிகாரிகளை வைத்து தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக ஆதர் இல்லை என்றால் வாக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் ஒருவரி அடையாளத்தைக்கூட உறுதிப்படுத்த முடியாத தேர்தலெல்லாம் ஒரு தேர்தலா ஐடி தேசம் என்றுதான் பெயர் - ஆனால் இது போன்ற ஆள்மாறாட்டங்களால் மானமே போகிறது


sankaranarayanan
ஏப் 26, 2024 05:32

நாங்கள் முதலில் மிரட்டுவோம் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து நாங்கள் அடிப்போம் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து ஆளே இல்லாமல் செய்துவிடுவோம் இதுதான் எங்கள் தலைவரின் ஆணை


Senthoora
ஏப் 26, 2024 06:43

நீங்க எந்தத்தலைவரை சொல்லுறீங்க, அடிக்கடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி தேர்தல் காலத்தில் டில்லியில் இருந்து விமானத்தில் வருகிற தலைவரை தானே


T.sthivinayagam
ஏப் 26, 2024 05:08

பத்து வருடங்களாக இது தான் நடக்குது


Francis
ஏப் 26, 2024 05:07

தப்புதான் அதிகாரிகளை வைத்து மிரட்டக் கூடாது புல்டோசர் வைத்து தான் இடிக்கனும் உடைக்கனும் அடிக்கனும்


Senthoora
ஏப் 26, 2024 06:48

உபி யோகியின் ஸ்டைலில் என்று சொல்லுங்க


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ