உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டைப்பாதை நிறைவு; தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் சேவை எப்போது?

இரட்டைப்பாதை நிறைவு; தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் சேவை எப்போது?

சென்னை: மதுரை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்துள்ள நிலையில், கூடுதல் ரயில் சேவை துவங்காதது பயணியரிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.தமிழகத்தின் கனவு திட்டமான, சென்னை எழும்பூர் -- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ல் துவங்கி, 2021ல் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவக்கப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக, மதுரை -- திருநெல்வேலி -- நாகர்கோவில் -- கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணிகளை, 2022ல் முடிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டது. கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பணிகள் துவங்கி முழு வீச்சில் நடந்ததால், கடந்த ஆண்டு அக்., மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டன. இருப்பினும், இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படாதது, பயணியரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பயணியர் ஏமாற்றம்கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலர் எட்வர்ட் ஜெனி ஆகியோர் கூறியதாவது: சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு, தற்போது இயக்கப்படும் விரைவு ரயில்கள் போதுமானதாக இல்லை. தற்போதுள்ளதை காட்டிலும், 100 சதவீதம் தேவை இருக்கிறது. எனவே, பயணியருக்கான ரயில்களை அதிகரித்து இயக்க வேண்டும். சென்னை - கன்னியாகுமரி இடையே, பல ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை பாதை பணிகள் முடிந்து, ஐந்து மாதங்கள் ஆகி விட்டன.இருப்பினும், கூடுதல் ரயில்களின் சேவை துவங்காதது, பயணியரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், ரயில் நிலையங்களை அழகுபடுத்தும் பணிகளை தவிர்த்து விட்டு, கூடுதல் இணைப்பு ரயில் பாதைகள், நடைமேடைகள் அமைப்பது, பணிமனைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகளில், ரயில்வே கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.சொல்வது என்ன?தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை -- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணி முடிந்ததால், விரைவு ரயில்களில் பயண நேரம் 20 நிமிடம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும்போது, பயண நேரம் மேலும் குறையும். மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், நாகர்கோவில் உள்ளிட்ட, முக்கிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளும், யார்டுகள் மேம்படுத்தும் பணிகளும் நடப்பதால், கூடுதல் ரயில்களை இயக்குவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. இந்த பணிகள் முடிந்த பின், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

S ramji
மார் 15, 2025 19:10

Infra d after long years shd be put to use immediately Running 4 5 addl trains cabn b easily accommodated even with existing infra


RAJENDRAN K
மார் 08, 2025 22:06

ஆல் ஐஸ் well


seyed omer
மார் 07, 2025 22:23

முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் சேவை எப்போது நடைபெறும் .மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும். மேலும் மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்கப்படும் தென்னக ரெயில் சேவையின் மூலமாக தமிழ் நாட்டின் தென்மாவட்டங்கள் மூலமாகவே அதிக வருவாய் ஈட்டி வருகிறது ஆனால் ஒன்றியரசு ஓரவஞ்சனையுடன் நடந்து வருகிறது


Balasubramanian
மார் 07, 2025 13:23

மதுரை நகரை தலைமையிடமாகக் கொண்டு டெமு மெமு ரயில்களை இயக்கலாம். மதுரை திருச்சி - மதுரை கரூர் - மதுரை நெல்லை.


Supra Maniyan
மார் 07, 2025 07:52

உன்னையான செய்திகள் நன்றா இருக்கின்றThu


fitz gerard rayen
மார் 07, 2025 03:28

உண்மைதான் நமது ரயில் பயணத்தின் லாபத்தில் ஓசி பயணம் செய்யும் உத்தர பிரதேஷ் பீகார் மக்கள் இந்த ஆட்சியில் அனுபவிக்கிறார்கள் எல்லா ரயில் திட்டங்களும் வடக்கில் தான் நிறைவேற்றப்படுகிண்டன


Arul Narayanan
மார் 06, 2025 16:36

போதுமான அளவு ரயில்களை இயக்க வேண்டுமானால் ரயில் கட்டணம் உயர்த்தப் பட வேண்டும். மதுரை போடி நாயக்கனூர் 100 கிமீ தூரத்தை 100 நிமிடங்களில் அடைய வெறும் 25 ரூபாய். அதே தூரம் பேருந்துகளில் 180 நிமிடங்களில் அடைய 75 ரூபாய்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மார் 06, 2025 16:20

கூடுதல் ரயில்கள் என்பது தென்மாவட்ட மக்களுக்கு பகல் கனவாகவே உள்ளது. முக்கியமான வழித்தட பிரச்னை முடிந்தவுடன் இப்போது தேவையற்ற காரணங்களை கூறி தள்ளி போடுகிறார்கள். தமிழக எம்பிக்கள் என்ன புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரயில்வே அதிகாரிகள் சிலரும் ஆம்னி பேருந்து பினாமிகளாக செயல்பட்டுக்கொண்டு மக்களுக்கு திட்டங்களை வரவிடாமல் தடுக்கிறார்கள். மக்களும் மங்குனியாகவே இருப்பதால் கேள்வி கேட்க யாருமில்லை என்று இஷ்டத்திற்கு ஆடுகிறார்கள்.


shyamnats
மார் 06, 2025 12:15

இதுவரை மக்கள் நலனுக்காக என்ன பேசியிருக்கிறார்கள் ? சலுகை விலையில் கேன்டீனில் செலவழிப்பதை தவிர . ஏனோ அலிபாபாவும் திருடர்களும் கதை நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.


Vadakkuppattu Ramanathan
மார் 06, 2025 10:16

அருமையான நமது தென்மாவட்ட M.Pக்கள் பார்லிமென்டில் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் - வடை தோசை காப்பி சாப்பிடுவதைத் தவிர? மற்ற மாநில M.Pக்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் தங்கள் மாநிலத்திற்காக ரயில்வேயிடமிருந்து பல திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை