மேலும் செய்திகள்
தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்
5 hour(s) ago | 11
சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்கள் கைது: இபிஎஸ், அன்புமணி கண்டனம்
6 hour(s) ago | 5
அவலுார்பேட்டை,:வளத்தி அருகே பஸ் - மினி லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் இறந்தார்; 13 பேர் படுகாயமடைந்தனர்.தேனி மாவட்டம், சின்ன ஓவுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் நாகராஜ், 39; வேன் டிரைவர். இவர், தினமும் தேனியில் இருந்து விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ஈச்சர் மினி லாரியில் பழங்களை லோடு ஏற்றி செல்வது வழக்கம். நேற்று மினி லாரியில் லோடுடன், செஞ்சியிலிருந்து, சேத்பட் நோக்கி காலை 6:00 மணிக்கு வளத்தி வழியாக சென்று கொண்டிருந்தார். அண்ணமங்கலம் பாலம் அருகே வந்தபோது, மேல்மலையனுாரிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ், நாகராஜ் ஓட்டிச் சென்ற மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் நாகராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.மினி லாரியில் வந்த மாற்று டிரைவர் கம்பம், உத்தமபாளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் செல்வம், 28; மற்றும் பஸ் பயணிகள் 12 பேர் காயமடைந்தனர். அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago | 11
6 hour(s) ago | 5