உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருங்கைக்காய் விலை விர்... கிலோ ரூ.150க்கு விற்பனை

முருங்கைக்காய் விலை விர்... கிலோ ரூ.150க்கு விற்பனை

கம்பம்: தேனியில் முருங்கைக் காய் விலை திடீரென உயர்ந்து உழவர் சந்தைகளில் கிலோ ரூ.105 முதல் 115 வரையிலும், வெளி மார்க்கெட்டில் ரூ.150 முதல் ரூ.175 வரையிலும் விற்பனையானது.முருங்கை மானாவாரி நிலங்களிலும், இறவை பாசனத்திலும் தேனி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக முருங்கைக் காய் வரத்து ஆகஸ்ட், செப்டம்பரில் இருக்கும். தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பூக்கள் உதிர்ந்து, மகசூல் பாதிக்கப்படும் நிலையுள்ளது.சில நாட்களுக்கு முன் வரை கிலோ ரூ.40 முதல் ரூ.50 என விற்பனையானது. நேற்று கம்பம் உழவர் சந்தையில் கிலோ ரூ.105, தேனியில் ரூ.110, சின்னமனுாரில் ரூ.115 என விற்கப்பட்டது.வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.150 முதல் ரூ.175 வரை விலை போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை