உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது போதையில் கூகுள் மேப்பை பார்த்து கார் ஓட்டி 7 பேர் மீது ஏற்றி இறக்கிய பெண்

மது போதையில் கூகுள் மேப்பை பார்த்து கார் ஓட்டி 7 பேர் மீது ஏற்றி இறக்கிய பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அசோக் நகர் : சென்னை, அசோக் நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் சரிதா, 45. இவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை விசேஷ நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து, வீட்டில் இடப்பற்றாக்குறை இருந்ததால், வீட்டின் முன் சிறு தெருவில் படுத்து உறங்கினர்.இந்த நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணியளவில் தறிக்கெட்டு வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் துாங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது. ஆனால், காரை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிமக்கள் எழுந்தனர்.அப்பகுதி முட்டு சந்து என்பதால் வேறு வழியின்றி கார் நிறுத்தப்பட்டது. அதேநேரம், அப்பகுதிமக்கள் மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட 'ஜீப்' காரை மடக்கினர்.

அப்போது, காரை ஓட்டியது வடமாநில பெண் என்பது தெரிய வந்தது. அவருக்கு தமிழ் தெரியவில்லை. மேலும், அவர் மது போதையில் காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில், நான்கு பெண் உட்பட ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில், சரிதா, பிள்ளை நாயகி ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரை பறிமுதல் செய்து அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர். இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வைஷாலி, 41, என்பதும், மதுபோதையில் கார் ஓட்டியதும் உறுதி செய்யப்பட்டது. சென்னையில் தங்கி உள்ள வைஷாலி, அசோக் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, மொபைல் போனில் 'கூகுள் மேப்'பை பார்த்து கார் ஓட்டி வந்துள்ளார்.கூகுள் மேப் தெரு மற்றும் முட்டு சந்துகள் வழியாக பாதை காட்டி உள்ளது. அந்தவகையில், சரிதா வீட்டின் வழியாக சென்ற கார், தெருவில் படுத்து உறங்கியவர்கள் மீது ஏறி இறங்கியது தெரிந்தது. போலீசார், வைஷாலி மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனர்.நாங்கள் சரிதா வீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம். இடப்பற்றாக்குறையால், வீட்டு வாசலில் தெருவோரத்தில் படுத்து துாங்கினோம். அப்போது தறிக்கெட்டு கார் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில், வீட்டு வாசலில் படுத்து துாங்கியவர்கள் மீது கார் ஏறி இறங்கியது. ஆனால், கார் ஓட்டிய பெண், 'என்ன நடந்தது என்பது கூட தெரியாத அளவிற்கு போதையில் இருந்தார். அவருக்கு தமிழும் புரியவில்லை. அவரது சென்னை உறவினர் வந்து, நிலைமையை விளக்கினார்.-விபத்தை பார்த்தஉறவினர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Ramesh Sargam
மே 16, 2024 19:42

அரசியல் செல்வாக்கில் அந்த குடிகாரி பெண் தண்டனையிலிருந்து தப்பித்துவிடுவார்


DARMHAR/ D.M.Reddy
மே 16, 2024 01:27

மது போதையில்காரோட்டி வந்ததின் காரணாமாக தீர விசாரிக்கப்பட்டு காரோட்டும் உரிமை ஒரு ஐந்து வருடங்கள் வரை நீக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் குறைத்த பட்சம் ஒரு மாத காலமாதமாவது சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று நீதி அரசர் தீர்ப்பளித்தால் தான் குற்றவாளிகள் திருந்துவார்கள் என்பது பொது மக்கள் நபீக்கை என்றால் அது மிகையாகாது


Sakthi Sakthiscoops
மே 15, 2024 18:31

கூகுள வழிகாட்டி காட்டுவதை புரிந்து கொள்ள மனிதன் நிதானத்தில் இருக்க வேண்டும் கூகுளை அமைப்பில் இருசக்கர வாகனமா, நான்கு சக்கர வாகனமா என்பதை தெளிவாக தெரிவு செய்ய வேண்டும் இது சிறு சந்துகளை தவிர்க்க உதவும். வழிகாட்டி செயலி புதுப்பிப்பதும் அவசியம்


chidhambaram
மே 14, 2024 16:09

விபத்த்துக்கு காரணம் போதையா இல்ல கூகிள் மேப் ஆ , அளவுக்கு வித்யாசம் தெரியாத அப்பாவி நிருபர் இவளுக்கு என்ன தண்டனை கிடைச்சுர போகுது , எவனாவது ஹெல்மெட் போடாம ரோட்டில் போய்ட்டார் அவ்ளோதான் சட்டம் தன் கடமையை சிறப்பா செய்யும்


Senthoora
மே 14, 2024 09:23

இதுக்கு அரசியல் இழுப்பது, இதே ஒரு தமிழன் செய்திருந்தால் உங்க கமெண்ட் எப்படி இருந்திருக்கும் போயி வேலையை பாருங்க


Guna Gkrv
மே 14, 2024 07:03

இதுக்கு ஏன் அரசியலை இழுக்கிற


Dwarakanath Putti
மே 14, 2024 00:56

பார்த்து கமெண்ட் போடுங்க


R S BALA
மே 13, 2024 19:33

அட


காசி
மே 13, 2024 19:08

கூகுள் மேப் ஓனர் பச்சைத்தமிழன் ஆச்சே. குறுக்கு வழியை காட்டியிருக்காரு.


krishna
மே 13, 2024 20:25

KASI ENNA MURASOLI PADIPPADHU VITTACHA.SUNDAR PICHAI BRAHMIN.AVAR THIRUTTU THIYAMUKKA SOLPADI AVAR PACHAI THAMIZHAN ILLAI.VANDHERI.AANA ONGOLE KUDUMBAM PACHAI THAMIZHARGAL.


பாண்டியன்
மே 13, 2024 19:07

அசோக் நகர் நல்லாத்தான் இருந்திச்சு. இப்புத்தான் முட்டுச்சந்து, முடக்குத் தெருன்னு ஆயிடிச்சு.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ