உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொருளாதார குற்றப்பிரிவு: விசாரணை சேவை மையம் முடக்கம்

பொருளாதார குற்றப்பிரிவு: விசாரணை சேவை மையம் முடக்கம்

சென்னை: மோசடி நிதி நிறுவனங்கள் குறித்த தகவல் அறிய, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துவங்கிய, விசாரணை சேவை மையம் முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விதவிதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடி நிதி நிறுவனங்கள், 14,000 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளன. இதனால், மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து, முதலீட்டாளர்கள் முன்கூட்டியே அறிய, சென்னை அசோக் நகரில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவில், தொலைபேசி வாயிலாக விசாரணை செய்யும் சேவை மையம் துவக்கப்பட்டது.இதன் வாயிலாக, நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளதா என்பது, முதலீட்டாளர்களின் மொபைல் போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வந்தது.இந்த மையத்தை தொடர்பு கொள்ள, 044 - 6550 0155 என்ற தொலைபேசி எண்ணும், 98405 84729 என்ற மொபைல் போன் எண்ணும் அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த எண்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடக்கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் மோசடி நிதி நிறுவனங்களிடம் சிக்கித் தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ