மேலும் செய்திகள்
பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றச்சாட்டு: அண்ணாமலை காட்டம்
1 hour(s) ago | 6
தேர்தல் பணி: தி.மு.க., துவக்கம்வரும் 2026 சட்டசபை தேர்தலில், மகளிருக்கு அதிக தொகுதிகள் தரப்பட வேண்டும் என, தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவிடம் மகளிர் அணி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.சட்டசபை தேர்தல் பணிகளை திட்டமிட, தி.மு.க.,வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது. கட்சியின் துணை அமைப்புகளாக கருதப்படும் 22 அணிகளின் நிர்வாகிகளிடம், அக்குழுவினர் வரிசையாக ஆலோசனை நடத்த உள்ளனர்.முதல் கூட்டமாக, மகளிர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று துவங்கியது. மாணவர் அணி மாநில தலைவர் ராஜிவ் காந்தி, மாநில செயலர் எழிலரசன், மகளிர் அணி மாநில தலைவி விஜயா தாயன்பன், மாநில செயலர் ெஹலன் டேவிட்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.'சட்டசபை தேர்தலில், கடந்த முறை ஒதுக்கிய எண்ணிக்கையைக் காட்டிலும், அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும். கிளை செயலர் நிர்வாகிகள் வரை, மகளிரை நியமிக்க வேண்டும்' என, மகளிர் அணி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், 'கல்லுாரி மாணவர்களை ஒருங்கிணைத்து, திராவிட மாணவர் மன்றங்கள் வாயிலாக, பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும். மாணவர் சட்டசபை என்ற அமைப்பை பள்ளிகளில் உருவாக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது.
1 hour(s) ago | 6