உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு இன்ஜி., கல்லுாரிகளில் மின் வாகன ஆய்வகம்

அரசு இன்ஜி., கல்லுாரிகளில் மின் வாகன ஆய்வகம்

சட்டசபையில் அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:l அண்ணா பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, நான்கு சிறப்பு பயிலகங்களில் பொதிகட்டுதல் தொழில்நுட்பம், நில எண்ணெய் வேதிப்பொறியியல், காலணி தொழில்நுட்பம், தோல் மற்றும் அலங்கார தொழில்நுட்பம், அலங்காரம் மற்றும் ஆடை தொழில்நுட்பம், ஆயத்த ஆடை தொழில்நுட்பம் போன்ற, புதிய டிப்ளமா படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்l திருநெல்வேலி, தர்மபுரி, ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில், மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம், 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்l தமிழக வரலாறு குறித்த ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக, தமிழக ஆவண காப்பகத்தில் உள்ள வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மீள் உருவாக்கம் செய்யப்படும்l அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை 20 சதவீதம், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் 15 சதவீதம், சுயநிதி கல்லுாரிகளில் 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை