உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய மின் வாரியம் குழு அமைப்பு

புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய மின் வாரியம் குழு அமைப்பு

சென்னை:கடந்த 2023 டிச., முதல், ஊழியர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்வதற்கு, எட்டு பேர் அடங்கிய குழுவை மின் வாரியம் அமைத்துள்ளது.தமிழக மின் வாரியத்தில், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட பல பதவிகளில், 80,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 2023 டிச., 1 முதல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, ஊதிய உயர்வை விரைந்து அறிவிக்குமாறு நிர்வாகத்திற்கு, பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில தொழிற்சங்கங்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டன. இதையடுத்து, 2023 டிச., முதல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக பேச்சு நடத்த, மின் பகிர்மான கழகத்தின் நிதி பிரிவு இயக்குநர் தலைமையில், எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார். இக்குழு, விரைவில் தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்த உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

saravan
மார் 14, 2025 18:11

அரசு ஊஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு உண்டாம்...ஆனால் 01.04.2026 முதலாம்...அப்படியே பழைய பென்ஷனும் உண்டு...ஆனால் 01.04.2126 என அறிவித்திருக்கலாம்...இதுதாண்டா திராவிட மாடல்... இதுதாண்டா திராவிட மாடல்...


saravan
மார் 14, 2025 08:30

அய்யா, ஊதிய உயர்வு அனைவருக்கும் அல்ல...அதிலும் இந்த விடியா அரசு தனது வேலையை காட்டிவிட்டது.. கடைநிலை ஊழியர்களுக்கு மட்டுமே. அடுத்தமுறை அவர்களுக்கும் கிடைக்காது என்பதே உண்மை...இந்த பாசக்கார கம்யூனிச தோழர்கள் எங்கே போனார்கள்...???