உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: முழு விபரம் இதோ!

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: முழு விபரம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையில் 33 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விளையாட்டு வீரர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 5.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித்துறையில் இன்ஸ்பெக்டர், மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.* income tax inspector- 11,* tax assistant-11* multi tasking staff- 11இந்த பணியிடங்களுக்கு ஹாக்கி, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், கபடி, கூடைபந்து, செஸ், டெபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கல்வி தகுதி என்ன?

* இன்ஸ்பெக்டர், tax assistant பணியிடங்களுக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.* multi tasking staff பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். tax assistant, multi tasking staff பணியிடங்களுக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.tnincometax.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சமூக நல விரும்பி
செப் 16, 2024 11:34

Thank you


P. VENKATESH RAJA
செப் 16, 2024 10:09

வருமான வரித்துறையில் வேலை கிடைப்பது எல்லாம் அதிர்ஷ்டம் தான்