உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., பெயரில் போலி அறிவிப்புகள் விஜய் அதிர்ச்சி: போலீசில் முறையீடு?

த.வெ.க., பெயரில் போலி அறிவிப்புகள் விஜய் அதிர்ச்சி: போலீசில் முறையீடு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக வெளியிடப்படும் போலி அறிக்கைகளால், அதிர்ச்சி அடைந்துள்ள நடிகர் விஜய், அதுபற்றி போலீசில் முறையிட திட்டமிட்டுள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியை, நடிகர் விஜய், பிப்ரவரி மாதம் துவங்குவதாக அறிவித்தார். கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம், இந்திய தேர்தல் கமிஷனிடம் வழங்கப்பட்டு உள்ளது.அதில் உள்ள குளறுபடிகள் காரணமாக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அவற்றை சரி செய்து, மீண்டும் விண்ணப்பம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கங்கள் உள்ளன. அக்கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் வெளியிடும் அறிக்கைகள் இடம் பெறுகின்றன.இதேபோன்ற பெயரில், பல போலி சமூக வலைதள பக்கங்களும் செயல்படுகின்றன. இதில், ஆபாச படங்கள் அதிகளவில் பதிவேற்றப்பட்டு, விஜய் ரசிகர்கள் மத்தியில், அதிருப்தி உருவாக்கப்பட்டு வருகிறது.அது மட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழகத்தின் லெட்டர் பேடு போன்று உருவாக்கி, அதில், பல்வேறு பொய் செய்திகள் பரப்பபடுகின்றன.விஜய்யுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் கூறியது போல, போலி அறிக்கை தயாரிக்கப்பட்டு, சமீபத்தில் வெளியிடப்பட்டது.தேச நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி மீண்டும் வருவதற்கு ஓட்டளிக்க வேண்டும் என, விஜய் கூறியது போல, மற்றொரு போலி அறிக்கையும் வெளியிடப்பட்டது.இவ்வாறு போலி அறிக்கைகள் அதிகளவில் பரவும் நிலையில், இது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, போலீசில் புகார் அளிக்குமாறு, நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழ்வேள்
ஏப் 05, 2024 11:40

தறுதலை வெட்டி கட்சி - இந்த பெயர்தான் சரியாக இருக்கும் பெற்றோர் , வீடுவாசல் , மனைவி மக்கள் என்று எல்லோரையும் நடு தெருவில் விட்டுவிட்டு , இவன் கட்டவுட்டுக்கு பால் , பீர் அபிஷேகம் செய்யும் விசிலடிச்சான் குஞ்சுகளை தொண்டர்களாக கொண்ட சில்லறை கட்சி எப்படி இருக்கும் ? இன்னொரு திருட்டு புரட்டு கழகம் அவ்வளவுதான்.


ராமகிருஷ்ணன்
ஏப் 05, 2024 11:15

அறிக்கையை வெளியிடுபவர்கள் யார். அதனால ஆதாயம் தேடும் கட்சி தான். சின்ன புள்ள கூட சொல்லுமே. ??


Barakat Ali
ஏப் 05, 2024 10:02

டீம்காவின் விளையாட்டு இது


Soumya
ஏப் 05, 2024 09:47

தமிழக வெற்றி கழகம் ஹீஹீஹீ பேசாம தமிழக தில்லுமுல்லு கழகம்னு மாத்து அது தா பொருத்தமா இருக்கும்


ALAGAPPAN NACHIAPPAN NACHI
ஏப் 05, 2024 09:42

இது தான் ஆரம்பம் ....இனி பல பிரச்சனையை சந்திக்கநேரிடும்


R S BALA
ஏப் 05, 2024 08:19

இத படிச்சிட்டு சிரிச்ச சிரிப்புல கண்ணுல தண்ணி வந்துடிச்சி போங்க? அரசியல அவ்வளோ லேசா நினைச்சுட்டார் நம்ம சோசப் விசை


Sck
ஏப் 05, 2024 07:50

தவெகவை விரைவாக சொன்னால் தவிக என்று வரும். ஏற்கனவே தமிழர்கள் தவிப்பது பத்தாது என்று விஜயிமா நம்மை தவிக்க விட வேண்டும். கொடுமை.


J.V. Iyer
ஏப் 05, 2024 06:07

ஐயோ பாவம் அவரே எழுதி இருந்தால் அமர்க்களமாக இருக்கும்


Kasimani Baskaran
ஏப் 05, 2024 05:19

என்னதான் நாடகம் போட்டாலும் நடிகர்களை நம்புவது மகா மடத்தனம் என்பதை ஏற்கனவே பலர் அவர்களின் நடத்தை மூலம் நிரூபித்துள்ளார்கள் தன்னை மாற்றத்தை கொண்டுவரும் மகான் என்று சொல்லப்படும் இவர் ஒரு சொகுசுக்காருக்கு ஒழுங்காக வரி கட்டாமல் கோர்ட் வரை சென்று வாதாடி வாங்கிக்கட்டிக்கொண்டு வரி கட்டினார் ஒரு சின்ன விசயத்திலேயே நேர்மையாக இருக்க விரும்பாத இவர் நேர்மையானவர் என்பது காதில் பூ சுற்றும் வேலை


Sck
ஏப் 05, 2024 07:51

சூப்பர், அருமையான உண்மையான பதிவு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை