வாசகர்கள் கருத்துகள் ( 1 )
90% நிறைவேற்றியாச்சு. சுடலை சொல்லிட்டாரு
தஞ்சாவூர்:''ஆட்சிக்கு வரும் முன்பு வாக்குறுதியை அளித்து விவசாயிகள் வாக்குகளை பெற்று விட்டு, ஆட்சிக்கு வந்த பின் மறந்து விடுகின்றனர்,'' என, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் தெரிவித்தார்.தஞ்சாவூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநாடு, தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் தலைமையில் நேற்று நடந்தது. இம்மாநாட்டில், பங்கேற்ற மாநில பொதுச்செயலர் சுந்தரம் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, ஒவ்வொரு மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு ஒரு மாதம் கூட கொடுத்ததில்லை. அதை வலியுறுத்தியும் வாங்குவதில்லை. மேகேதாதுவில் அணை கட்டுவோம் என அடிக்கடி மிரட்டல் விடுக்கிறது கர்நாடகா. அதை தடுக்க வேண்டும். ஆட்சிக்கு வரும் முன, விவசாயிகளுக்கு எல்லா இலவசம் என்பது போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஆட்சிக்கு வந்த பின், விவசாயி சமூகம் இருப்பதையே மறந்து விடுகின்றனர். வாக்குறுதிகளும் காற்றோடு போய் விடுகிறது. ஆட்சிக்கு வந்ததும், நெல் குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை செய்யவே இல்லை. உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அரசு முயற்சிக்கிறது; அதை கைவிட வேண்டும். தமிழகம் முழுதும் யாரெல்லாம் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளனரோ, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
90% நிறைவேற்றியாச்சு. சுடலை சொல்லிட்டாரு