உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து விதி மீறிய பெண் போலீசுக்கு அபராதம்

போக்குவரத்து விதி மீறிய பெண் போலீசுக்கு அபராதம்

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில், டூ - வீலரில் சென்ற பெண் போலீஸ் ஒருவர், ெஹல்மெட் அணியாமல், மொபைல் போனில் பேசிக் கொண்டே சென்றார். அதை, ஒருவர், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்ததோடு, 'வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார், விதிமுறைகளை மீறலாமா' என்று கேட்டார்.இந்த தகவலை அறிந்த திருச்சி மாநகர போலீஸ் அதிகாரிகள், டூ - வீலரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் செல்வராணி என்ற போலீஸ்காரர் தான் என்பது தெரிந்தது. மேலும், போக்குவரத்து விதிமுறையை கடைபிடிக்காத அவருக்கு, போலீஸ் அதிகாரிகள், 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ