உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இங்கேதான் இதயமும் இருக்கும்; சண்டையும் இருக்கும்: வெளிநாடு பயணத்துக்கு முன் அண்ணாமலை வெளிப்படை!

இங்கேதான் இதயமும் இருக்கும்; சண்டையும் இருக்கும்: வெளிநாடு பயணத்துக்கு முன் அண்ணாமலை வெளிப்படை!

சென்னை: 'நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும்,' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புகாக, தமிழக பா.ஜ., தலைவர் செல்ல உள்ளார். இந்நிலையில், சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், என் இதயம் இங்கே தான் இருக்கும்.

அறிக்கை வரதான் செய்யும்!

வெளிநாடு சென்றாலும் அரசியல் செய்வேன். நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும். பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி பயணம் செல்ல இருக்கிறோம்.

கிராமத்தை நோக்கி பயணம்

தேசிய அளவில் பிரதமர் மோடியும், தமிழகத்தில் எச்.ராஜாவும் முதல் உறுப்பினராக பா.ஜ.,வில் இணைவர். உறுப்பினர் சேர்க்கைக்காக இம்முறை கிராமத்தை நோக்கி பா.ஜ., பயணம் மேற்கொள்கிறது. பா.ஜ., தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாடு பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தன.

தனித்து போட்டி

கட்சி வளர வேண்டும் என்றால் தனித்துத் தான் போட்டியிட வேண்டும். அரசியலில் மக்களின் பார்வை மாறிவிட்டது. 40 சதவீத வாக்காளர்கள் 39 வயதுக்குக் கீழ் இருக்கின்றனர்.இந்தியா மாறிவிட்டது. அ.தி.மு.க.,வில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் டை அடித்துக் கொண்டால், அவர்கள் இளைஞர்கள் ஆகிவிடுவார்களா? மக்களிடம் பேசுவதிலும், செயலிலும் தான் இருக்கிறது இளமை. தலையில் டை அடிப்பதில் இல்லை. இ.பி.எஸ்., மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரியானது.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Oviya Vijay
ஆக 27, 2024 19:47

தமிழ்நாட்டுல 2026 லயும் பிஜேபிக்கு கோவிந்தா... 2029 லயும் பிஜேபிக்கு கோவிந்தா அப்படின்னு தெரிஞ்சு தான் இங்க உக்காந்துகிட்டு இருந்து ஒன்னும் யூஸ் இல்லை அப்படின்னு தான் இவர வெளிநாட்டுக்கு கிளப்பி விடுது மத்திய பிஜேபி... தமிழ்நாட்டு லோக்சபா எலெக்ஷன் ரிசல்ட் அப்போ அப்போ இவங்களுக்கு எல்லாம் கண்ணுல வந்து போகுமா இல்லையா...


வாசகர்
ஆக 27, 2024 17:06

சர்வதேச அரசியலை அலசி ஆராயப்போகும் சகலகலா வல்லவர் அண்ணாமலையார் வாழ்க வளர்க. உங்களால் இரண்டு திராவிட கட்சிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள் என்பது இங்கு பதிவிடும் எதிர்மறை கருத்துக்கள் மூலம் உணர முடிகிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்


T.S.Murali
ஆக 27, 2024 15:58

எடப்பாடி ஒன்றும் தெரியாதவர் இல்லை. நேரம் பார்த்து திமுகவை அடிப்பார்.2026kku பிறகு பிஜேபி க்கு இனி தமிழ் நாட்டில் வேலை ஒன்றும் இல்லை.


Mettai* Tamil
ஆக 27, 2024 17:17

பிஜேபி க்கு இனி தமிழ் நாட்டில் அதிக வேலை இருக்கு .....


அப்பாவி
ஆக 27, 2024 15:57

மேல்படிப்பில் கவனம் செலுத்தவும். அரசியல் சாக்கடை கெடக்குது கழுதை.


Velan Iyengaar
ஆக 27, 2024 16:11

படிப்பு வேற ... அறிவு வேற .... அதுக்கு இதை விட ஒரு எடுத்துக்காட்டு வேற எதுவும் வேணுமா ???


கோவிந்தரா சு
ஆக 27, 2024 15:53

கத்து குட்டி


ulaganathan murugesan
ஆக 27, 2024 15:49

நீ வெளிநாடு போகும்போது 2 ஆட்டுகுட்டிய கமலாயத்தில விட்டுட்டுப் போ... உனக்கு பதிலா அது கத்திகிட்டு இருக்கும்.


Murali T K
ஆக 27, 2024 17:44

well said


கோவிந்தராசு
ஆக 27, 2024 15:30

வெளங்காது


Srinath Babu KSD
ஆக 27, 2024 15:24

உண்மையான பெயரில் வரவும். திருவாளர் velan ayangaar அவர்களே


Velan Iyengaar
ஆக 27, 2024 16:14

புனை பெயரில் எழுதும் மீதி எல்லோரும் உண்மை பெயரில் வந்தால் நானும் வருவேன் .... அப்புறம் .. என்ன திட்டாதீங்க ..... நானும் அக்மார்க் ஹிந்து தான் .......


Velan Iyengaar
ஆக 27, 2024 16:15

உண்மை கசக்கத்தான் செய்யும் ... ரொம்போ எரியும் கூட ..... அதற்க்கு கம்பெனி பொறுப்பல்ல சந்தனம் அல்லது பர்னால் பூசிக்கொள்ளவும் .... உள்ளே எரிந்தால் வூட்வர்ட்ஸ் கிரேப் வாட்டர் குடிக்கவும்


Sathyanarayanan Sathyasekaren
ஆக 27, 2024 19:10

வேளாண் ஐயங்கார், பெயரில் மட்டும் ஹிந்துவாக இருந்து என்ன உபயோகம், உங்களது கருத்துக்கள் சனாதன தர்மத்தை அழிக்க துடிக்கும் ஊழலில் திளைத்து குடும்பத்திற்கு பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் கொள்ளைக்காரர்களும், அந்நிய நாட்டு மதத்தினரின் காலை வோட்டை பிச்சைக்காக பிடிக்கும் மதிகெட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பது ஒரு ஹிந்து செய்யக்கூடாது.


கூமூட்டை
ஆக 27, 2024 15:18

வாழ்க வளமுடன் அண்ணாமலை வந்து பார்த்துக் கொள்ளலாம் இந்த கூமூட்டை கும்பலை


P. VENKATESH RAJA
ஆக 27, 2024 15:11

அண்ணாமலை போல ஒரு நல்ல தலைவர் வெளிநாட்டுக்கு சென்றால் அது நமக்கு தான் ஆபத்தை உருவாக்குமே தவிர அவருக்கு அல்ல அதை மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் அண்ணாமலை தமிழகத்திற்கு திரும்பும் போது மக்கள் 2026 சட்டசபையில் ஓட்டளித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை