உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவலத்தை மறைக்கவே அயல்நாட்டில் போட்டோஷுட்: அரசு மீது இ.பி.எஸ்., விமர்சனம்

அவலத்தை மறைக்கவே அயல்நாட்டில் போட்டோஷுட்: அரசு மீது இ.பி.எஸ்., விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தின் அவலநிலையை மறைப்பதற்காகவே, வெளிநாட்டு போட்டோ ஷுட்டிலும், கார் ரேஸிலும் தி.மு.க., அரசு கவனம் செலுத்தி வருவதாக இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே விடியா அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது. இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது.வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் அரசுக்கு எனது கடும் கண்டனம். அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்னைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ulaganathan murugesan
செப் 02, 2024 16:23

நீங்க வெளிநாடு போயி போட்டோஷூட் நடத்தவில்லையா ???


RAMAKRISHNAN NATESAN
செப் 02, 2024 18:39

கரெக்ட்டா கேட்டீங்க ..... இருவருக்குமே பொய் சொல்லி மக்கள் பணத்தில் வெளிநாடு சென்று என்ஜாய் பண்ண உரிமை இருக்கு ..... மக்கள்தான் பரிதாபத்துக்கு உரியவர்கள் .....


Jysenn
செப் 02, 2024 15:50

Kodanaadu Komaan will soon start another Makkal Nala Koottani with an aim to helping the ruling party.He helped dmk get 40/40 recently and in 2026 will again help dmk get 234/234. Kodanaadu will be saved. EPS will be saved.


Kumar Kumzi
செப் 02, 2024 15:23

விடியல் ஐயா ஹாலிஹுட் படங்களில் காமெடியனாக நடிக்க வாய்ப்புகள் தேடி அமெரிக்கா போயிருக்காரு


s sambath kumar
செப் 02, 2024 14:45

அடுத்த ஆட்சியையும் இவனுக தான் புடிப்பானுங்க. இவன் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு பல்லை இளித்துக்கொண்டு ஓட்டை போட்டதும் மூதேவி கூட்டம் தமிழ் நாட்டில் தான் உள்ளது. எதிர்க்கட்சிகளும் சரியில்லை. திருட்டு திராவிட முட்டாள்கள் கழகம் கூட்டணி அடிமைகளை வைத்துக்கொண்டு ஜெய்த்துவிடும் பாருங்கள்.


Kadaparai Mani
செப் 02, 2024 14:26

திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் . திருச்சி போராட்டம் அறிவித்து உள்ளீர்கள் .மிக சிறந்த காரணம் சொல்லி உள்ளீர்கள் .தடுப்பு அணை உடைந்த விஷயத்தை நீதிமன்றம் கொண்டு சொல்லுங்கள் .இது மாதிரி அடுக்கடுக்கான போராட்டங்களை அறிவியுங்கள் .அதிமுக மிகப்பெரிய வெற்றியை 2026 ஆம் ஆண்டு பெறப்போகிறது மிகசிறந்த புது கூட்டணி மூலம் .


RAMAKRISHNAN NATESAN
செப் 02, 2024 18:20

அந்நிய முதலீடுகள் வரவேண்டும் என்றால் ஒன்று அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் ..... உதாரணம் தரமான சாலை .... தண்ணீர் வசதி .... தடையற்ற மின் விநியோகம் .... இரண்டாவதாக ஊழலற்ற நிர்வாகம் ...... நாமல்லாம் இந்த ரெண்டிலேயே ஃபெயில் மார்க்கு .....


Ashanmugam
செப் 02, 2024 13:19

சரியாக சொன்னீங்க. ஆனால் ஆண்டி சொல்லு அம்பளத்தில் ஏறாது என்பதுபோல் உங்கள் அறைகூவல் திமுக அரசு மதிப்பதில்லை, ஏற்றுகொள்வதும் இல்லை. தும்பை விட்டு வாளை பிடிப்பது போல் அதிமுக ஆட்சியை திமுகவிடம் தாரை வார்த்துவிட்டு, இப்போ திமுக மீது கொக்கரிப்பதும், குறை கூறுவதும், விமர்சிப்பதும் ஒருகாலும் வேலைக்கு ஆகாது.


Lion Drsekar
செப் 02, 2024 13:18

மக்கள் சிரிப்பாய் சிறிக்கிறார்கள் அப்படி சிரிக்காதவர்களுக்கு இது போன்ற செய்திகள் ஒரு பொழுதுபோக்கு , இது போன்ற செய்திகளுக்கு நாட்டுக்கு என்ன பயன் ? வந்தே மாதரம்


Ramesh Sargam
செப் 02, 2024 12:40

மகன் ஏற்பாடு செய்த கார் ரேஸ் பிடிக்கவில்லை போலும். அதான் முதலீடு ஈர்க்க போகிறேன் என்று கிளம்பிவிட்டார். கிடைக்கும் அந்த முதலீடு, மகன் கார் ரேஸ் நடத்திய செலவுக்கு ஈடு செய்யப்படும். அது நிச்சயம்.


Svs Yaadum oore
செப் 02, 2024 12:37

ரியல் எஸ்டேட் கொள்ளை ஜி சதுர கார்பொரேட் கம்பெனி , கார் ரேஸ் நடத்தி கார்பொரேட் கம்பெனிகளுக்கு நாட்டை விற்கும் விடியல் .....பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 765 நாட்களாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு .....ஒருதலைபட்சமாக கிராம மக்கள் எதிர்ப்பை மீறி ஏகனாபுரத்தில் நில எடுப்பு அறிவிப்பாணையை அறிவித்த தமிழக அரசு .... போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு..... இதை கேட்க நாதி இல்லை ....கார் பந்தயம் , வெளிநாடு பயணமாம் ....கேவலமான ஆட்சி நடக்குது .....