உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி எடைச்சீட்டு கேரளா லாரி பறிமுதல்

மோசடி எடைச்சீட்டு கேரளா லாரி பறிமுதல்

தென்காசி: கேரளாவுக்கு மோசடி எடை சீட்டுடன் கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் சோதனையிட்டு பறிமுதல் செய்தனர்.திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குவாரிகளில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளால் ரோடுகள் சேதம் அடைவதோடு விபத்துகளில் அடிக்கடி உயிர் பலிகள் ஏற்படுகின்றன. எனவே அதிக எடை கொண்ட லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கேரள பதிவெண் கொண்ட ஒரு லாரியை புளியரை போக்குவரத்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் சோதனையிட்டனர். லாரி டிரைவர் வைத்திருந்த எடை சீட்டில் 36 ஆயிரத்து 730 கிலோ கனிம வளம் கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசார் அந்த லாரியை கட்டளைகுடியிருப்பு பகுதியில் உள்ள எடைநிலையத்தில் சோதனையிட்டபோது 44 ஆயிரத்து 610 கிலோ இருப்பது தெரிய வந்தது.8 ஆயிரம் கிலோ குறைத்து சீட்டு பெற்றிருந்தனர். புளியறை போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தவறான எடை சீட்டு தந்த செங்கோட்டை பிரானுார் பார்டரில் உள்ள எடை நிலையத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை