உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குட்கா வழக்கிலிருந்து விடுவிக்க கோரி வணிக வரி முன்னாள் அதிகாரி மனு

குட்கா வழக்கிலிருந்து விடுவிக்க கோரி வணிக வரி முன்னாள் அதிகாரி மனு

சென்னை : குட்கா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, வணிக வரித்துறை முன்னாள் அதிகாரி, தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, சி.பி.ஐ., பதில் அளிக்கும்படி, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.லஞ்சம் பெற்றுக்கொண்டு, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்க அனுமதித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உட்பட, 26 பேருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கு, சென்னையில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய்பாபா முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் மட்டும், இதுவரை குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொள்ளவில்லை' என்று கூறிய நீதிபதி, அடுத்த விசாரணைக்குள் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, வணிக வரித்துறை முன்னாள் இணை ஆணையரான குறிஞ்சி செல்வன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு, சி.பி.ஐ., பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ