வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அடுத்ததாக கமகமக்கும் கூவத்தில் 50 கோடி செலவில் மறைந்த தலீவர் நினைவாக கட்டுமர போட்டி.
கிடக்கிறது கிடக்கட்டும் , கிழவியை தூக்கி மணையில வை … சட்டம் ஒழுங்கு சரியில்லை , ரோடு சரியில்லை , மருத்துவ வசதி சரியில்லை , மின்சாரம் சரியில்லை . ஆனால் 240 கோடி செலவில் சிலர் திருப்திக்காக ரேஸ் .
நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை தான் ஞாபகத்தில் வருகிறது தமிழகத்தில் வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும் தெருவோரத்திலும் நீர்நிலைப் பகுதிகள் என்று தெரிய வண்ணம் உள்ள இடத்திலும் குடியிருக்கும் மக்கள் அதிகமாக உள்ளார்கள் இவர்களுக்கு ஒரு கனவு நமது குடியிருக்கும் பகுதிக்கு ஒரு ஓசி பஸ் அதைக் கூட விடுத்து அரசு பேருந்து வருமா என்று கனவில் உள்ளார்கள்.. ஃபார்முலா ஒன் கார் ரேஸ் என்றால் என்ன என்று கேட்கக்கூடிய சமூகத்தை உள்ளடக்கிய மாநிலத்தின் இளவரசர் இதை நடத்தலாமா? மனுநீதிச் சோழன் கதையில் வரும் இளவரசன் கூட அறியா பாலகன் என்பது முக்கியம்
ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே இந்தக் கால கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே இந்தக் கால கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே கை நீட்ட மறுத்த பய கவிழ்ந்தான்டி முன்னாலே
ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே நல்லதும் கெட்டதும் இங்கே நடப்பதெல்லாம் பெண்ணாலே நல்லதும் கெட்டதும் இங்கே நடப்பதெல்லாம் பெண்ணாலே முழுசா பாட்டில் சொல்ல முடியாது என்னாலே
பூனையை பறக்க விடுங்க என்று காதலி சொன்னால் எனபதற்காக, 20 வது மாடிக்கு போய் பூனைக்கு இறக்கை கட்டி விட்டு தூக்கி போட்டால் அது பறக்குமா ? மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் கார் ரேஸ் நடத்தினால், மாநில பொருளாதாரம் வளருமா? மக்கள் வாழ்வு தான் மலருமா?
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்று கிராமத்து பக்கத்தில் ஒரு சொல்லடை வழக்கம் உண்டு.. ராத்திரியில் ரேஸ் நடத்தாராங்கலாம். அதிகமான மின் விளக்குகள் யாருக்கும் பயன் இல்லாத ஒரு பந்தயம், நடு ரோட்டில்,
இனி மாதம் ஒரு முறை இப்படி ரேஸ் நடத்தப்படும். அதற்கு 5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு வந்தாலும் வரும். தமிழக மக்களே ஈர துணியை எடுத்து வயிற்றில் போட்டுக் கொள்ளுங்கள்.. இனி சோறு வேண்டாம்.. தண்ணீர் வேண்டாம்.. கார் ரேஸ் மட்டும் போதும்.
கருணாநிதி இப்போ இருந்து இருந்தால்.. கார் ரேஸ் க்கு வாழ்த்தா சொல்லி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்.. அவர் நடையில் சொல்ல வேண்டும் என்றால். "கும்பி எரியுது.. குடல் கறுகுது .. கார் ரேஸ் ஒரு கேடா..?" என இப்போ கலைஞர் கருணாநிதி இருந்து இருந்தால் கேட்டு இருப்பார்..
3 கிலோ மீட்டருக்கு ஒரு ரேஸ் ... இந்த பக்கம் ஓடுகிற காரை அந்த பக்கம் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த பக்கம் ஓடுகிற காரை இந்த பக்கம் உள்ளவர்கள் பார்க்க முடியாது இதுக்கு பெயர் ரேஸ் என்று சொல்றாங்க ..யாருமே முழுதாக பார்க்க முடியாத ரேஸ் க்கு செலவு இத்தனை கோடி.. மக்கள் அவதி, நன்றாக உள்ள சாலையை கெடுத்து.. தொல்லை.. மேல் தொல்லை... இதற்கு தான் அறிவு திறமையும், அரசியல் முதிர்ச்சியும் உள்ளவர்கள் தான் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று.. யாரோ ஒரு சிலர் பயன் அடைய.. சென்னையே கண் கலங்க வேண்டுமா.. ?