உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி அரசியலும் என்னுள் இயங்கும்!

இனி அரசியலும் என்னுள் இயங்கும்!

மக்களே உருவாக்கும் மக்களாட்சியை அரசியல் கயவர்கள் சிதைத்து, தங்களின் கைவசப்படுத்தி தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். பிழைப்புவாத கொள்ளை அரசியலை நடத்தி, மக்களாட்சியின் மாண்புகளையே முற்றிலும் சீர்குலைத்து விட்ட கட்சிகளை விரட்டியடிக்காமல் விடுதலை இல்லை என்பதை, மக்கள் உணரும் காலம் நெருங்கி விட்டது.சொல்லில் அடங்காத துயரங்களை மறைத்து, வியர்வையில் நனைத்து கொண்டு கதவிடுக்கின் வழியே கையசைத்து வாழ்த்து கூறியவர்களின் முகங்களே என்னை இந்த அரசியலுக்குள் இனிமேல் இயக்கும்.அறம் சார்ந்த நேர்மையான மக்களுக்கான அரசியலின் அத்தனை வழிகளையும் அடைத்து விட்டு, அரசியலை வியாபாரமாக்கி கொழுக்கும் கொள்ளைக் கூட்டங்களை நேர்மையான வேட்பாளர்கள் மூலமாகவே அகற்ற முடியும். இந்த உண்மையை இளைய தலைமுறையினர் புரிந்து கொண்டனர். எப்போதும்போல் கலை, இலக்கியம், விவசாயத்தோடு இனி, அரசியலும் என்னுள் முழு மூச்சாக இயங்கும்.- தங்கர்பச்சான்,சினிமா இயக்குனர், கடலுார் பா.ம.க., வேட்பாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ