| ADDED : ஜூலை 26, 2024 08:28 PM
பவானி:ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில், சூதாட்ட கிளப் நடப்பதாக வந்த தகவலின்படி, சித்தோடு போலீசார் சோதனை நடத்தினர். ஒரு கிளப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 21, பெலிக்ஸ், 40, உட்பட சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்தபோது, ஒருவர் தப்பி ஓடி விட்டார்.விசாரணையில், 'காலிங்கராயன் மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடப்பதும், தி.மு.க.,வை சேர்ந்த சூரியம்பாளையம் பகுதி செயலர் குமாரவடிவேல் என்பவருக்கு கிளப் சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. ஏழு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். குமாரவடிவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர். குமாரவடிவேல் மற்றும் தப்பிய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.