உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு தாயே: பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுதல்

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியை கொடு தாயே: பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆனைமலை,:'எங்களை பணி நிரந்தரம் செய்ய ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தி கொடு தாயே' என, ஆனைமலை மாசாணியம்மனுக்கு 'வேண்டுதல் சீட்டு' வைத்து, பகுதிநேர ஆசிரியர்கள், நுாதனமாக வேண்டுதல் வைத்துள்ளனர்.தமிழகம் முழுதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும், 16,549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் எனக் கூறியிருந்தது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை.கோவை, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நீதி வேண்டி பக்தர்கள் பிரார்த்தனையை, வேண்டுதல் சீட்டில் எழுதி, அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டால், இரு வாரங்களுக்குள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.இதையறிந்த பகுதிநேர ஆசிரியர்கள் சிலர், தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டுமென, ஆனைமலை மாசாணியம்மனிடம், தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நல்ல புத்தி, சிந்தனை கொடுத்து, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, 'வேண்டுதல் சீட்டு' எழுதி வைத்து வழிபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Senthil
மார் 18, 2025 18:22

அந்த வேலை பிடிக்கவில்லை என்றால், வேறு வேலைக்குச் செல்லுங்கள். அரசு பள்ளிகள் ஏழைகளுக்கானது என்ற நிலையை உருவாக்கியது யார்? அரசு சம்பளத்தை பெறும் ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யாமல், வாங்கும் சம்பளத்திற்கு செலவும் இல்லாததால் அந்த பணத்தைக்கொண்டு வட்டி தொழிலை பிரதானமாக செய்யும் ஆசிரியர்கள்தான் அரசு பள்ளிகளின் இந்த நிலைக்கு முழு காரணம். அரசு பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டு ஏழை குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை மட்டும் அரசு செலுத்தும் காலம் மிக விரைவில் வர இருக்கிறது.


अप्पावी
மார் 15, 2025 20:13

இது மாதிரி மனு வெல்லாம் ஒர்க் அவுட் ஆகாதுன்னு தாய் இரண்டு வாரத்தில் சொல்லிடுவாள்.


B MAADHAVAN
மார் 15, 2025 13:17

ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தி தர ஆண்டவனை வேண்டுவது நல்லதுதான். முதலில், வாக்காளர்களுக்கு நல்ல புத்தி தர வேண்டும் என்று வேண்டுங்கள்.


Senthil
மார் 18, 2025 18:27

வாக்காளர்கள் எப்போதும் நல்ல புத்தியோடுத்ன் இருக்கிறார்கள், அதனால்தான் யார் நம்மவர், நம் உறவினர், நம் இனம் என தெரிந்து அறிந்து அந்நியர்களை ஒதுக்கிவிட்டு வாக்களிக்கிறார்கள். இல்லயென்றால் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்துவிடும் அபாயம் ஏற்படும் அல்லவா? தமிழ்நாட்டிலேயே தமிழை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கும் கூட்டம் ஆட்சிக்கு வரும் அபாயம் ஏற்பட்டுவிடும் அல்லவா?


Ramesh Sargam
மார் 15, 2025 12:54

அந்தத்தாய் கேட்கிறாள், அவர்களுக்கு புத்தி என்று ஒன்று இருந்தால் நல்ல புத்தியை கொடுக்கலாம். ஆனால் அந்த புத்தி என்பது அவர்களிடம் இல்லையே. நான் எப்படி நல்ல புத்தியை அவர்களுக்கு கொடுக்கமுடியும்? தாயின் கேள்வி சரியானது.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 15, 2025 08:44

நீங்கள் மேரி மாதாவிடம் வேண்டியிருந்தால் " நான் கிறிஸ்தவன்தான் " என்பவருக்கு உங்கள் மீது பார்வை பட வாய்ப்பு உண்டு


VENKATASUBRAMANIAN
மார் 15, 2025 08:22

இவர்களுக்கு ஓடாடு போடும் போது அறிவு வராது இப்போது கூப்பாடு போடுவது. திமுகவைப்பற்றி தரியாதா. ஓட்டுக்காக எதையும் சொல்வார்கள்.இனிமேலாவது புரிந்து கொண்டு ஓட்டு போடுங்க


நாஞ்சில் நாடோடி
மார் 15, 2025 10:41

பொதுவாக அரசு அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சமுதாய அக்கறை குறைவு. அவர்கள் தனது சம்பளம் தனது குடும்பம் என்று யோசிப்பவர்கள். சுயநலமிகுந்தவர்கள். எனவே இவர்கள் தி மு கா வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்...


sridhar
மார் 15, 2025 08:13

முதலில் உங்களுக்கு , ' திமுகவுக்கு வோட்டு போடாத நல்ல புத்தி கொடு தாயே ' என்ற வேண்டுதல் தான் தேவை.


pmsamy
மார் 15, 2025 08:02

மாசாணி அம்மன் உனக்கு நல்ல அறிவை கொடுத்துதா அதை எங்க வச்சிருக்க காமி


Mettai* Tamil
மார் 15, 2025 13:28

நல்ல அறிவை கொடுத்திருந்தா அவங்க ஏங்க ஊழலுக்கு ஓட்டு போடுறாங்க ....


Oru Indiyan
மார் 15, 2025 07:59

நல்ல புத்தியா.. இல்ல கமல் விக்ரமில் பாடுவாரே புட்டியும் பத்தலே குட்டியும் பத்தலே அதுவா


Kasimani Baskaran
மார் 15, 2025 07:19

ஓட்டுப்போடும் பொழுது கேடிகளுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு அம்மனிடம் முறையிட்டு என்ன பயன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை