உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்விரோத கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது

முன்விரோத கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது

சென்னை: ''முன் விரோதம் காரணமாக நடக்கும் கொலைகளுக்கு, அரசு பொறுப்பேற்க முடியாது,'' என, அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, 'தமிழகம் கொலை மாநிலமாக மாறி விட்டது' என, புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தமிழகம் கொலை மாநிலம் அல்ல. கலை மற்றும் அறிவு சார் மாநிலம். சமூக விரோதிகளை களை எடுக்கின்ற மாநிலம். அவரது ஆட்சியில் நடந்த சம்பவங்கள், ஆட்சியோடு தொடர்புடையவை. தி.மு.க., ஆட்சியில் எந்த வன்முறை சம்பவங்களும், ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல. கோடநாடு பங்களா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக இருந்தது. அங்கு தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அது முந்தைய ஆட்சியாளர்களின் திறமையின்மையை காட்டுவதாக அமைந்தது. சொந்த காரணங்கள்தமிழகத்தில் ஐந்து சம்பவங்களை, பழனிசாமி கூறியுள்ளார். அதில், ஒன்று புதுச்சேரியில் நடந்தது. மீதமுள்ள நான்கு சம்பவங்கள் அரசியல் தொடர்புடையவை அல்ல. சொந்த காரணங்களுக்காக அல்லது முன் விரோத அடிப்படையில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.சட்டம் - ஒழுங்கு சீர்கெடும் அளவுக்கு எந்த சம்பவமும் கிடையாது. கருணாநிதியை நான்கு கோடி மக்களுக்கு தலைவர் என்போம். தற்போது, ஸ்டாலின் எட்டு கோடி மக்களுக்கு தலைவராக உள்ளார். மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எண்ணிக்கையும், கூடும், குறையும். இதற்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. அதற்கு நாங்கள் பொறுப்பாக இருந்தால், எங்கள் மீது குற்றம் சாட்டலாம். யார் யாருக்கு முன் விரோதம் உள்ளது என்று கண்டுபிடித்து கொண்டிருக்கிறோம். நடவடிக்கைரவுடிகளிடம் உள்ள ரவுடிகள் பட்டியலை வைத்து, அவர்களுக்குள் முன் விரோதம் உள்ளதா என்பதை கண்டறிந்து தீர்க்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பவராக முதல்வர் உள்ளார்.சட்டம் - ஒழுங்கை சிறப்பாக பேணி பாதுகாப்பதால், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. எல்லா தொழில் அதிபர்களும் நம்மை நாடி வருகின்றனர்.பழனிசாமி போன்றவர்கள் இதை வேறு கோணத்தில் மாற்றி விட்டு, தமிழகத்தை பின்னோக்கி தள்ளி விட முடியுமா என்று கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு ஒரு காலத்திலும் பலிக்காது.பழிவாங்கும் உணர்ச்சியில் கொலை செய்கின்றனர். இதற்கு அரசு பொறுப்பாக முடியாது. ஆனால், இதை தடுக்க நிறைய நடவடிக்கை எடுத்துள்ளோம். சிறைகளில், 97 சதவீதம் நிரம்பி உள்ளது. ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை, கைது செய்து சிறையில் வைத்துள்ளோம். சிறார் பள்ளிக்கு வருவோரை திருத்தி அனுப்புகிறோம். முன்னாள் குற்றவாளிகளை கண்காணிக்கிறோம்.எனினும், புதிய குற்றவாளிகள் வருகின்றனர். நிறைய செயல்களை காவல்துறை தடுத்துள்ளது. அரசியல் தலைவர்கள் அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறினால், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, அரசு தயங்குவது இல்லை. யாரும் அச்சுறுத்தல் இருக்கிறது என, தகவல் தெரிவிப்பதில்லை.சிறைகளை மூடவில்லைஎந்தச் சிறையையும் மூட வேண்டும் என்று சொல்லவில்லை. சிறைகளை பழுது பார்க்க நிதி கேட்டுள்ளோம். ஆணவப் படுகொலைகளை நாங்கள் என்றைக்கும் ஆதரிப்பது கிடையாது. யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.சென்னையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு கூறுகையில்,''கொலை குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு நடவடிக்கை எடுக்கின்றனரா என்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் எந்த குற்றம் நடந்தாலும், நடவடிக்கை எடுக்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mani . V
ஜூலை 31, 2024 05:11

இது புதுசா இருக்கே மிஸ்டர் ரகுபதி. நீயெல்லாம் என்ன சட்ட அமைச்சரோ?


Godyes
ஜூலை 30, 2024 17:43

செய்யறது கொலை அதிலென்ன முன் விரோதம் பின் விரோதம்


JANA VEL
ஜூலை 30, 2024 15:58

முன்விரோதம் மட்டுமே தெளிவாக அறியமுடியும். அதை கவனித்து தடுக்கமுடியும். ஆனால் அதற்க்கு பொறுப்பு ஏற்கமுடியாது என்றால் ... நாளைக்கு யாரை போட்டாலும் முன்விரோதம் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொல்லி மூடிவிடலாம். முன்விரோத கொலைக்கு பொறுப்பு இல்லை என்றால் அவ்வப்போது அங்கங்கு நடக்கும் கொலைக்கு மந்திரி பொறுப்பு எடுக்க போகிறாரா . எல்லாம் அன்னக்காவடிகள்


ponssasi
ஜூலை 30, 2024 13:34

முன் விரோதம் இது அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டது திமுகாவிற்கும் முன்விரோதத்திற்கும் தொடர்பு இல்லை. திமுக ஆட்சியில் முன்விரோதம் தீர்க்கப்படுகிறது. இந்த கொலைகளுக்கு எல்லாம் முன்விரோதத்தை ஏற்படுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியே பொறுப்பேற்கவேண்டும்.


Ramesh Sargam
ஜூலை 30, 2024 11:46

அப்படி என்றால் கொலைகள் தொடர்ந்து நடக்கட்டும் என்று கருதுகிறதா திமுக அரசு. எந்தவித கொலையானாலும், கொடுக்கப்படும் தண்டனை தீவிரமாக இருந்தால், கொலைகளை தடுக்கலாம். அரசு பொறுப்பேற்க வேண்டாம். ஆனால் காவல்துறை பொறுப்பாக கொலையாளர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். அப்படி தண்டிக்கும் பொது, ஆட்சியில் உள்ளவர்கள் கொலையாளிகளுக்கு உதவமுன்வர கூடாது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை