| ADDED : ஜூன் 18, 2024 06:05 AM
சட்டசபை கூட்டத்தொடர், நாளை மறுதினம் துவங்குகிறது. இதில், மக்கள் நல்வாழ்வு துறையின் சாதனைகள் குறித்து பேசுவதுண்டு. அதற்காக பணியாற்றும் டாக்டர்கள் நலன் குறித்து பேசுவதில்லை; அவர்களின் கோரிக்கை குறித்து அறிவிப்பு வெளியிடுவதும் இல்லை.எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை படிப்பு என, நீண்ட காலம் தங்களை வருத்திக் கொண்டு படிப்பதோடு, அரசு பணியில் சேர்ந்து, சவால்களை எதிர்கொள்ளும் டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு தர அரசு தயங்குகிறது. மற்ற மாநிலங்களில், எம்.பி.பி.எஸ்., டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, தமிழக டாக்டர்களுக்கு 40,000 ரூபாய் குறைவு. ஊதிய உயர்வு குறித்து புதிதாக அறிவிப்பு கேட்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணைப்படி, ஊதிய உயர்வை அரசு அளிக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கையில், இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.- பெருமாள் பிள்ளைஅரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர்