உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசு கேபிள், 'டிவி' ஒளிபரப்பில் ஏற்பட்டுள்ள தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக கேபிள், 'டிவி' ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் மாநில தலைவர் வெள்ளைச்சாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழக அரசு கேபிள், 'டிவி' வாடிக்கையாளர்கள், 10 லட்சம் பேர் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 5:00 மணி முதல், கேபிள், 'டிவி' ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.அரசு கேபிள், 'டிவி' ஆபரேட்டர்கள், 10,000த்துக்கும் மேற்பட்டோர், வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுவதோடு, தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, 'சாப்ட்வேர் பிரச்னை', சில தினங்களில் சரியாகிவிடும் என்கின்றனர். ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன், இதேபோல பல நாட்கள் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டது. பல வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும், 'டி.டி.எச்'.,க்கு மாறி விட்டனர்.இதனால், ஆபரேட்டர்கள் வருமானத்தை இழந்தனர். மீண்டும் அதே பிரச்னை தொடர்கதையாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் சுய தொழிலாக செய்யும், இந்த தொழிலை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனவே, முதல்வர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

mayil vaganan
ஜூன் 20, 2024 12:46

முதலில் அரசியல்வாதியை விட்டுத்தள்ளுங்கள் அரசாங்கத்திற்கு வருமானம் என்ற ஒன்றை உருவாக்கித் தருவது நாட்டு மக்கள்தான் அந்த விதத்தில் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் முதலில் ஏன் தனியாருக்கு விடுகிறார்கள் வருமானம் தரக்கூடிய. நல்ல விஷயங்களை எல்லாம் அரசாங்கம் தானே நடத்த வேண்டும் அது என்ன ஒரு அரசாங்கம் நடத்த முடியாது தொழில்தனியார்கள் மட்டும் நடத்த முடியும் என்கிறார்கள் அப்புறம் எதற்கு மக்களாட்சி முதலில் மக்கள் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் எதிர்க்கட்சியை ஆளுங்கட்சியும் ஐந்து வருடங்கள் தான் அவர்களுக்கு எல்லாம் ஆனால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் மக்கள்தான் அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து நல்ல விஷயத்திற்கு போராட வேண்டுமே தவிர இப்படி தனியா இருக்கு தாரை வாக்குகொடுக்கக் கூடாது


Ganapathy Subramanian
ஜூன் 17, 2024 15:30

சன் டிவி பங்குகள் வாங்க சரியான தருணம். அடுத்த காலாண்டில் அவர்கள் சந்தாதாரர்கள் கூடிவிட்டதாக கணக்கு காண்பித்தால் பங்கு விலை ஏற ஆரம்பித்து விடும்.


Kundalakesi
ஜூன் 17, 2024 12:48

அரசு செட்டொப் பாக்ஸ் எடுத்துட்டு சசிவ் டப்பாவை மாறியதால் நான் ஸ்மார்ட் டிவி கு மாறிவிட்டேன். எல்லாவற்றிலும் திராவிட ஊழல்தான்


ராது
ஜூன் 17, 2024 12:27

இது போல் பொள்ளாச்சியில் திடீரென கேபிள் ஆட்கள் எஸ் சி வி செட்டாப் பாக்ஸ் வைத்துவிட்டு அரசு கேபிளை அவர்கள் நடத்தவில்லை என்று கூறி வைத்தனர் - நாங்கள் டாடாவிற்கு மாறிவிட்டோம் அரசு/எஸ்சிவி கங்கு டாடா காட்டி வீதியில் கேபிள் தோரனத்தை குறைத்தோம்


ஜான்
ஜூன் 17, 2024 11:47

பிரச்சனையை நடத்துவதே கார்ப்பரேட்டுகளாகத்தான் இருக்கும். இதில் சன் டிவி குழுமமும் அந்த டிடிஎச் முறையில் தொழில் செய்கிறது...அரசாங்கம் தலையிட வேண்டுமாம்.....நகைப்பாகவும் வெறுப்பாகவும் உள்ளது


Arunkumar
ஜூன் 17, 2024 09:56

35 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்த அரசு கேபிள் தற்போது 10 லட்சம் ஆக குறைந்து விட்டது... HD பாக்ஸ் சப்ளை இல்லை 3 வருடமா இருந்த customer நெறய இழந்து விட்டோம் dmk அரசு எந்த மக்களுக்கும் உதவி இல்லாத அரசு .......


Vijay
ஜூன் 17, 2024 11:40

ஆனா ஓட்டை மட்டும் 500/- வாங்கி திமுகவுக்கு ...


Suba
ஜூன் 17, 2024 14:43

மக்கள் விசித்திரமானவர்கள். கேடு கெட்டவர்களிடமே விசுவாசமாக இருப்பார்கள் .


Murugesan
ஜூன் 17, 2024 09:50

திமுக குடும்பம் அழியும் காலம் நெருங்கி விட்டது போல


sankaranarayanan
ஜூன் 17, 2024 09:27

இவர்களெல்லாரும் சன்.டி.விற்கு வருவார்கள் என்று தெரிந்தான் செய்யப்பட்டது இதற்கு யார் முக்கிய காரணம் என்று நான் சொல்லக்கூடாது


R S BALA
ஜூன் 17, 2024 09:04

அனுபவிங்க..இன்னும் இருக்கு அனுபவிக்க நிறைய.


R.MURALIKRISHNAN
ஜூன் 17, 2024 09:00

சன் டிவியை ஒழித்து கட்டினால் எல்லா பிரச்சனைகளும் தீரும். தமிழ்நாடு நலம் பெறும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ