உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடம் பெயர்ந்தார். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் குவிந்தனர்.நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். குரு பகவான் கார்த்திகை 1ம் பாதத்தில் மேஷ ராசியில் இருந்து கார்த்திகை 2ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு இன்று மாலை 5:19 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். தொடர்ந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆபத்சகாயேஸ்வரர் மூலஸ்தான பிரகாரத்தில் உள்ள குருபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கபட்டு, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து ராஜ அலங்காரத்தில் சிறப்பு வழிபாடுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Velan Iyengaar
மே 01, 2024 19:30

மோடி மற்றும் அமித் இருவருக்கும் இது எப்படி வேலை செய்ய போவுது ???


Bhakt
மே 01, 2024 20:23

They are Karma YogisNot bound by astrology


P. VENKATESH RAJA
மே 01, 2024 19:16

இனிமேல் ரிஷப ராசி டாப்பு டக்டர் தான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை