மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
பெங்களூரு, இந்தியாவின், 'மாக் -- 3' ரக ராக்கெட் ஏவு வாகனத்திற்கான புதிய உந்துசக்தி டாங்க் தயாரிப்பு மற்றும் சி.என்.சி., இயந்திர கட்டமைப்பு வசதிகளை, பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல்., என்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் ஆலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார்.அப்போது, சோம்நாத் பேசியதாவது:தற்போது இருக்கும் வசதிகளை வைத்து, ஆண்டுக்கு இரண்டு 'மாக் -- 3' ராக்கெட் ஏவு வாகனங்களை மட்டுமே தயாரிக்க முடிகிறது. இந்த புதிய கட்டமைப்பு வசதிகளை வைத்து, ஆண்டுக்கு ஆறு மாக் - -3 ஏவு வாகனங்களை தயாரிக்க முடியும்.இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களில், எச்.ஏ.எல்., நிறுவனம் மிக முக்கிய பங்காற்றும் என்பதால், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு சவால்கள் மற்றும் இஸ்ரோ மீது உள்ள அழுத்தத்தை குறைக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
14 hour(s) ago